Know the word NAIVE...
Word of the day is NAIVE...
/naɪˈiːv/
Function
The word NAIVE is an adjective.
Meaning
It means lacking worldly experience and wisdom என்று சொல்லலாம் அதாவது உலக அனுபவமும் அறிவும் இல்லாத என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! நாம் யாராவது ஒருவரை NAIVE என்று இந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் அந்த நபர் உலக அனுபவம் இல்லாதவர், எது சரி? எது தவறு? என்று அறிந்து தேர்ந்தெடுக்க தெரியாதவர், தானாகவே சிந்தித்து செயல்பட புத்தி இல்லாதவர், யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்ப கூடியவர், உலக மக்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளத் தெரியாதவர் என்று அர்த்தம்.
யாருக்குமே தன்னை பிறர் NAIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி கூப்பிடவே பிடிக்காது என்றே சொல்லலாம்.
ஒரே வார்த்தையில் மிகவும் தெளிவாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்த SOPHISTICATED என்று ஒரு வார்த்தையை படித்தோம் அந்த வார்த்தைக்கு அப்படியே எதிர்ச்சொல்தான் இந்த NAIVE என்ற இந்த வார்த்தை.
எனவே NAIVE = UNSOPHISTICATED என்றே சொல்லலாம்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உலகின் போக்கை அறியாதவர் அல்லது உலக அனுபவம் இல்லாதவர் போன்ற அர்த்தங்களில் NAIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
In a sentence
He is so naive that he believes everybody.
அவன் உலக அனுபவம் இல்லாதவனாக இருப்பதால் அவன் எல்லோரையும் நம்புகிறான்.
If you are so naive, you will be easily misled.
நீங்கள் உலகின் போக்கை அறியாதவராக இருந்தால், நீங்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படுவீர்கள்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த NAIVE என்ற இந்த வார்த்தையை உலகின் போக்கை அறியாதவர் அல்லது உலக அனுபவம் இல்லாதவர் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக