Know the word PERSPICACIOUS...

Word of the day is PERSPICACIOUS...
Pronunciation
/ˌpɝː.spɪˈkeɪ.ʃəs/

Function
The word PERSPICACIOUS is an adjective. 

Meaning
It means quick in noticing, understanding, or judging things accurately என்று சொல்லலாம் அதாவது ஒரு விஷயத்தை விரைவாகவும் துல்லியமாகவும் கவனிக்கக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் தீர்வு காணக்கூடிய என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! வகுப்பறையை பொறுத்தவரையில் எல்லா மாணவர்களுக்கும் எல்லா பாடமும் புரியும் ஆனால் அதனை புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு மாணவனும் எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் மாறுபடும் அதனாலதான் ஐந்தாம் வகுப்பில்  கடினமாக தெரிந்த ஒரு கணித பாடம் பத்தாம் வகுப்பிற்கு சென்ற பிறகு அந்த ஐந்தாம் வகுப்பு கணித பாடத்தை பார்க்கும்பொழுது மிகவும் எளிதாக தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் சில மாணவர்கள் ஆசிரியர் பாடத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது எவ்வளவு கடினமான பகுதியாக இருந்தாலும் அதனை அப்படியே புரிந்து கொள்வார்கள். 
இப்படிப்பட்ட அறிவாற்றலை கொண்டவர்களை விவரிக்கத்தான் இந்த PERSPICACIOUS என்ற இந்த வார்த்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் இப்படிப்பட்ட அறிவாற்றலை கொண்டவர்களிடம்  ஆசிரியராக இருந்தாலும் சரி, பெரியோர்களாக இருந்தாலும் சரி, பெற்றோர்களாக இருந்தாலும் சரி எதை குறித்தும் எந்தவித கதையும் விட முடியாது ஏனென்றால் சொல்வது கதை என்று அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். 

இப்படிப்பட்ட அறிவாற்றலை கொண்டவர்களை ஆங்கிலத்தில் intelligent, bright, clever shrewd, keen போன்ற வார்த்தைகளை கொண்டும் விவரிக்கலாம்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நுண்ணறிவு கொண்ட என்ற அர்த்தத்தில் இந்த PERSPICACIOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
He is perspicacious because he is so quick to understand everything.
அவன் நுண்ணறிவு கொண்டவன், ஏனென்றால் அவன் எல்லாவற்றையும் விரைவாகப் புரிந்துகொள்கிறான். 

You can't tell any lie to her because she is perspicacious.
அவள் நுண்ணறிவு கொண்டவள் என்பதால் அவளிடம் எந்தவித பொய்யும்  சொல்ல முடியாது.

Practice it
எனவே நண்பர்களே! நுண்ணறிவு கொண்ட என்ற அர்த்தத்தில் இந்த PERSPICACIOUS என்ற இந்த வார்த்தையை   பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...