Know the word SCANDAL...
Word of the day is SCANDAL...
/ˈskæn.dəl/
Function
The word SCANDAL is a noun.
Meaning
It refers to a disgraceful action or event or report என்று சொல்லலாம் அதாவது ஒரு அவமானகரமான செயல் அல்லது நிகழ்வு அல்லது அறிக்கை என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதனின் செயலானது நேர்மையற்றதாக, பிறரை வஞ்சிக்க கூடியதாக ஏமாற்றக் கூடியதாக இருக்கும் பொழுது மேலும் அது சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கும் பொழுது அது பொது மக்களின் பார்வையில் ஒழுக்கக்கேடானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் எனவே அந்த இடத்திலே இந்த SCANDAL இன்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே பணம் சார்ந்தோ அல்லது ஒழுக்கம் சார்ந்தோ ஒரு குழு நடத்திய ஒரு நிகழ்வானது சட்டத்திற்கு புறம்பானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SCANDAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மேலும் நண்பர்களே! இப்படிப்பட்ட SCANDALS எல்லாமே ஒரு தனி மனிதனுடைய அதிகப்படியான பேராசையினாலும் காம உணர்வினாலும் அதிகார துஷ்பிரயோகத்தினாலுமே உருவாகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் ஒரு தனி மனிதனைப் பற்றியோ அல்லது ஒரு குழுவைப் பற்றியோ பரவிய ஒரு செய்தியானது ஒழுக்க கேடானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும் பொழுது அந்த இடத்திலேயும் இந்த SCANDAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
ஆனால் அதே நேரத்தில் பரப்பப்பட்ட ஒரு செய்தியானது அதாவது ஒரு SCANDAL ஆனது எல்லா நேரத்திலும் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலே சமூக ஊடகங்களே அதிகப்படியான SCANDALகளை பரப்புகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஊழல் அல்லது அவதூறு என்ற அர்த்தங்களில் SCANDAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The company lost its reputation after the involvement in bribery scandal.
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட பிறகு நிறுவனமானது அதனுடைய நற்பெயரை இழந்தது.
Nowadays, the social media are highly used to spread scandals.
தற்பொழுது அவதூறுகளை பரப்ப சமூக ஊடகங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
Practice it
எனவே நண்பர்களே! இந்த SCANDAL என்ற இந்த வார்த்தையை ஊழல் அல்லது அவதூறு என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக