Know the word SCRUTINIZE...

Word of the day is SCRUTINIZE...
Pronunciation
/ˈskruː.t̬ən.aɪz/

Function
The word SCRUTINIZE is a verb.

Meaning
It means to examine something closely and thoroughly என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை நெருக்கமாகவும் முழுமையாகவும் ஆராய்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! பொதுவாகவே இந்த INCOME TAX OFFICERS ஒருவருடைய கணக்கு வழக்குகளை சோதனை செய்யும் பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஒரு வரி கூட விடாமல் வாசித்து கொடுக்கப்பட்டிருக்கின்ற  கணக்கு வழக்குகள் மிகவும் சரியாக இருக்கிறதா என்று சோதித்து ஆராய்வார்கள். இவ்வாறாக ஆவணங்களை சோதித்து ஆராயும் பொழுது அந்த இடத்திலே இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதேபோலவே பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது தான் அணிந்திருக்கிற ஆடையை ஒழுங்காக அணிந்திருக்கிறோமா என்று தன்னைத்தானே கண்ணாடி முன்பு நன்கு சோதித்து பார்த்த பின்பு வெளியே செல்வார்கள். இந்த இடத்திலும் கூட இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக எதையாவதொன்றை நெருக்கமாகவும் முழுமையாகவும் சோதித்து ஆராயும் பொழுது இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் இந்த SCRUTINIZE என்ற இந்த வார்த்தையை ஆராய்தல் அல்லது நன்கு சோதனை செய்தல் என்கிற அர்த்தங்களில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
She spent a lot of time to scrutinize her likeness in the mirror.
அவள் கண்ணாடியில் தன் உருவத்தை ஆராய்வதற்கு நிறைய நேரம் செலவிட்டாள்.

Usually the banks scrutinize the documents before giving any loans.
பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்பு ஆவணங்களை நன்கு சோதனை செய்யும்.

Practice it
எனவே நண்பர்களே! ஆராய்தல் அல்லது நன்கு சோதனை செய்தல் அப்படிங்ற இடத்தில இந்த SCRUTINIZE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...