Know the word SOPHISTICATED...
Word of the day is SOPHISTICATED...
/səˈfɪs.tə.keɪ.t̬ɪd/
Function
The word SOPHISTICATED is an adjective.
Meaning
It means having obtained worldly experience and intellectual என்று சொல்லலாம் அதாவது உலக அனுபவமும் அறிவாற்றலும் பெற்ற என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் தான் கற்ற கல்வியின் வாயிலாகவும் உலகத்தில் அவருக்கு கிடைத்த அனுபவத்தின் வாயிலாகவும் உலகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளை அறிந்தவனாக, உலகின் வெவ்வேறு இடங்களின் கலாச்சாரத்தை பண்பாட்டை அறிந்தவனாக திகழும் பொழுது அவன் உலகின் போக்கை அறிந்தவனாக திகழ்கிறான் இவ்வாறு உலக அனுபவமும் அறிவாற்றலும் பெற்ற ஒருவரை இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
அதைப்போலவே ஒரு இயந்திரத்திற்கு செயற்கையாக இப்படிப்பட்ட அறிவாற்றலை கொடுக்கும் பொழுது அந்த இயந்திரமும் உலக அனுபவமும் அறிவாற்றலும் கொண்டது போல செயல்பட ஆரம்பிக்கும் (எடுத்துக்காட்டாக நாம் பயன்படுத்தும் கணினியையும் அலைபேசியையும் ரோபோக்களையும் கொள்ளலாம்) மேலும் இவை மனிதனை விட பல மடங்கு அறிவாற்றல் கொண்டதாக செயல்படும் மேலும் மனிதனால் தீர்க்க முடியாத சிக்கல்களை கூட எளிதாக இந்த இயந்திரங்கள் தீர்த்துவிடும் எனவே அப்படிப்பட்ட இயந்திரத்தையும் இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
இவ்வாறாக ஒரு மனிதனோ அல்லது ஒரு இயந்திரமோ உலக அனுபவமும் அறிவாற்றலும் பெற்றவர்களாக சிறந்து விளங்கும் பொழுது அவர்களை இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நுட்பம் நிறைந்த அல்லது அதிநவீனமான போன்ற அர்த்தங்களில் இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The new version of mobile phones are more sophisticated than the old ones.
புதிய வகை மொபைல் போன்கள் பழையதை விட மிகவும் அதிநவீனமானதாக இருக்கிறது.
He is a sophisticated young man.
அவன் ஒரு நுட்பம் நிறைந்த இளைஞன்.
Practice it
எனவே நண்பர்களே! நுட்பம் நிறைந்த அல்லது அதிநவீனமான போன்ற அர்த்தங்களில் இந்த SOPHISTICATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக