Know the word UNPRECEDENTED...

Word of the day is UNPRECEDENTED...
Pronunciation
/ʌnˈpres.ə.den.t̬ɪd/

Function
The word UNPRECEDENTED is an adjective.

Meaning
It means never having happened or existed in the past என்று சொல்லலாம் அதாவது கடந்த காலத்தில் நடந்ததில்லை அல்லது இருந்ததில்லை என்று அர்த்தம்.

அதாவது ஏதாவதொன்று, அது மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கலாம் அல்லது மிகப்பெரிய சரிவாக இருக்கலாம். அந்த வளர்ச்சியோ அல்லது அந்த சரிவோ புதிதானதாக, இதற்கு முன்பு யாரும் கேள்விப்படாத அளவிற்கு அல்லது பார்க்காத அளவிற்கு அல்லது அனுபவிக்காத அளவிற்கு நடைபெறும் பொழுது அந்த இடத்தில் இந்த UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை ஒரு நிறுவனம் சந்திக்கும் பொழுது அந்த இடத்திலும் கூட UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்

அதைப்போலவே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சாலை விபத்து அல்லது கொலை, கொள்ளை போன்ற மோசமான நிகழ்வுகள் அதிக அளவு  நடக்கும் பொழுதும் UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் தமிழில் இதுவரை இல்லாத அல்லது முன்னெப்போதும் இல்லாத அல்லது அபூர்வமான அல்லது விசேஷமான போன்ற அர்த்தங்களில் இந்த UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
Students have passed the exam in an unprecedented level.
தேர்வில் மாணவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The survey says that road accidents have reached an unprecedented level.
சாலை விபத்துகள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

Practice it.
இவ்வாறாக தமிழில் இதுவரை இல்லாத அல்லது அபூர்வமான அல்லது விசேஷமான போன்ற அர்த்தங்களில் இந்த UNPRECEDENTED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...