Know the word AVUNCULAR...

Word of the day is AVUNCULAR...
Pronunciation
/əˈvʌŋ.kjə.lɚ/

Function
The word AVUNCULAR is an adjective.

Meaning
It means friendly, kind, or helpful, like the expected behaviour of an uncle என்று சொல்லலாம் அதாவது ஒரு தாய் மாமாவிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தைகளான நட்பு, கனிவு, உதவி மனப்பான்மை கொண்ட ஒரு நபர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த AVUNCULAR என்ற இந்த வார்த்தையானது லத்தீனில் உள்ள AVUNCULUS என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும். மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த AVUNCULUS என்ற இந்த வார்த்தையானது  ஒரு தாய் மாமாவை குறிப்பதற்காக லத்தீனில் பயன்படுத்தப்படுகிறது. அதே போலவே ஆங்கிலத்திலும் தாய் மாமாவை குறிப்பதற்காக AVUNCULAR என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக ஒரு தாய் மாமா தன்னுடைய மருமக்களிடம் ரொம்ப பாசமாகவும் நேசமாகவும் நட்புடனும் பழகக் கூடியவராக இருப்பார். நமது கலாச்சாரமும் தாய் மாமாவிற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் அறிவோம்

அதனைப் போலவே வெளிநாட்டு கலாச்சாரத்திலும் MATERNAL UNCLE அதாவது தாய் மாமனார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபராக இருக்கிறார். அவரை குறிப்பதற்காகத்தான் இந்த AVUNCULAR என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது அதனுடைய நீட்சியாகத்தான் இந்த வார்த்தையானது நட்புடன் பழகக் கூடிய, கனிவுடன் பழகக்கூடிய, உதவி மனப்பான்மை கொண்ட ஒரு நபரை குறிப்பதற்கும் பயன்படுத்தபடுகிறது.

பெரும்பாலும் இந்த மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை விட வயதில் சிறியவர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்வார்கள் மேலும் குழந்தைகளிடமும் இவ்வாறாக நடந்து கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக அந்த நபர் தெருமுனை கடைக்கார அண்ணனாக இருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கின்ற அண்ணனாக இருக்கலாம் அல்லது வீட்டுக்கு பால் கொடுக்க வருகிற பால்கார அண்ணனாக இருக்கலாம்.

இவர்களை ஆங்கிலத்தில் கூப்பிடும் பொழுது UNCLE என்று கூப்பிடுவோம் ஆனால் அதே நேரத்தில் தமிழில் கூப்பிடும் பொழுது பக்கத்து வீட்டு அண்ணன் அல்லது பால்கார அண்ணன் அல்லது கடைக்கார அண்ணன் என்று அண்ணன் என்ற அர்த்தத்திலே கூப்பிடுவோம்.

எனவே தமிழில் இரத்த உறவில் இருக்கும் தாய் மாமாவை குறிக்க பயன்படுத்தலாம் மேலும் இரத்த உறவில் இல்லாத ஒரு நபரை குறிக்க நல்லதொரு அண்ணன், உதவி செய்யக்கூடிய அண்ணன், பாசக்கார அண்ணன் என்கிற அர்த்தங்களிலும் இந்த AVUNCULAR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He has created an avuncular image in the neighborhood.
அக்கம்பக்கத்தில் அவர் ஒரு நல்லதொரு அண்ணன் என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார்.

If you stop helping others, you will lose your avuncular image.
நீ மற்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தினால், நீ உனது நல்லதொரு அண்ணன் என்ற பெயரை இழக்க நேரிடும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் இரத்த உறவில் இருக்கும் தாய் மாமாவை குறிக்க பயன்படுத்துங்க மேலும் இரத்த உறவில் இல்லாத ஒரு நபரை குறிக்க நல்லதொரு அண்ணன், உதவி செய்யக்கூடிய அண்ணன், பாசக்கார அண்ணன் என்கிற அர்த்தங்களிலும் இந்த AVUNCULAR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...