Know the word BIGOT...

Word of the day is BIGOT...
Pronunciation
/ˈbɪɡ.ət/

Function
The word BIGOT is a noun 

Meaning
It refers to a person who has strong, unreasonable beliefs and who does not like other people who have different beliefs or a different way of life என்று சொல்லலாம் அதாவது வலுவான, நியாயமற்ற நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நபர் மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகள் அல்லது வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட மற்றவர்களை விரும்பாதவர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் அவர் சார்ந்த இனத்தையோ அல்லது மதத்தையோ அல்லது அவர் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையையோ தீவிரமாக பின்பற்றும் பொழுது அவரை இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையையோ அல்லது அவர்களது அந்த மதத்தையோ நம்பாதவர்களை அல்லது ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது பிற மதத்தை பிற நம்பிக்கையை பின்பற்றுபவர்களை ஒரு எதிரியாகவே பார்ப்பார்கள்.

பெரும்பாலும் ஒரு இடத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு கலவரங்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கொண்டவர்களே அடிப்படையாக அல்லது மூலக்காரணமாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது.

மேலும் மத உணர்வையும் இன உணர்வையும் தாண்டி ஒருவர் சாதாரணமாக பிறர் கூறும் கருத்துக்களையோ அல்லது யோசனைகளையோ அல்லது எண்ணங்களையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவராக, தான் கொண்டிருக்கும் கருத்து மட்டுமே அல்லது யோசனை மட்டுமே சரி என்று ஆணித்தரமாக நம்பக்கூடியவராக நடந்து கொள்ளும் பொழுது அவரையும் கூட இந்த BIGOT என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அதாவது ஏறக்குறைய ஒரு HYPOCRITE போல அதாவது வெளிவேடக்காரரை போலவே செயல்படுவார்கள் ஏனெனில் அந்த வெளிவேடக்காரர்களுக்கு இருக்கிற பண்புகள் பெரும்பாலும் இவர்களுக்கு ஒத்து போகும்.

எனவே தமிழில் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் அல்லது குறுகிய மனம் கொண்டவர்கள் அல்லது சகிப்புத்தன்மை அற்றவர்கள் போன்ற அர்த்தங்களில் இந்த BIGOT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
If you are a bigot, you can't lead a peaceful life.
நீங்கள் ஒரு குறுகிய எண்ணம் கொண்டவராக இருந்தால், உங்களால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.

Many people act like bigots because they get some benefits out of it.
பலர் சகிப்புத்தன்மை அற்றவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் ஏனென்றால் அதன்மூலம் அவர்கள் சில பலன்களை பெறுகிறார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் அல்லது குறுகிய மனம் கொண்டவர்கள் அல்லது சகிப்புத்தன்மை அற்றவர்கள் போன்ற அர்த்தங்களில் இந்த BIGOT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...