Know the word BOMBINATE...

Word of the day is BOMBINATE...
Pronunciation
/ˈbɒmbɪneɪt/

Function
The word BOMBINATE is a verb.

Meaning
It means to make a buzzing sound என்று சொல்லலாம் அதாவது ரிங்கார ஒலியை எழுப்புதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த வண்டு, கொசு, ஈ போன்ற சிறு பூச்சிகள் பறக்கும் பொழுது ஒருவிதமான ஒலியை எழுப்பும் அதனை தமிழில் ரிங்காரம் என்று சொல்வோம் அந்த இடத்திலே இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் ஏர் கண்டிஷனர் மற்றும் யு பி எஸ் இன்வெர்ட்டர் பேட்டரி போன்ற மின் சாதனங்கள் ஒரு விதமான ஒலியை எழுப்பும் அந்த இடத்திலும் இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே சிலர் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதோ அல்லது சும்மா இருக்கும் பொழுதோ வாயால் முணுமுணுத்துக் கொண்டோ அல்லது ரிங்காரம் செய்து கொண்டோ இருக்கும் பழக்கம் உண்டு அந்த இடத்திலும் இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத பொழுது மாணவர்கள் ஒருவருக்கொருவர் அமைதியாக பேச ஆரம்பிப்பார்கள் அதனை தமிழில் சலசலப்பு என்று சொல்லுவோம் அந்த இடத்திலும்கூட இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் BUZZING, HUMMING, MURMURING போன்ற வார்த்தைகளை நிகரான வார்த்தைகளாக சொல்லலாம்.

எனவே தமிழில் சலசலத்தல், முணுமுணுத்தல் அல்லது ரிங்காரம் செய்தல் போன்ற அர்த்தங்களில் இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The whole class started to bombinate at the very moment the teacher went out of the class.
ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியே போன அந்த நொடியில் மொத்த வகுப்பும் சலசலக்க ஆரம்பித்தது.

The air conditioner had been bombinating the whole night.
இரவு முழுவதும் ஏர் கண்டிஷனர் ரிங்காரம் செய்து கொண்டே இருந்தது.

Practice it
எனவே நண்பர்களே! சலசலத்தல், முணுமுணுத்தல் அல்லது ரிங்காரம் செய்தல் போன்ற அர்த்தங்களில் இந்த BOMBINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...