Know the word CON...

Word of the day is CON...
Pronunciation
/kɑːn/

Function
The word CON can be used as noun, verb, adverb

Meaning
நண்பர்களே! இந்த CON என்ற இந்த வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லலாம் அதில் 95 சதவீதமான அர்த்தங்கள் நல்ல அர்த்தங்களே கிடையாது என்றும் சொல்லலாம்.

அந்த 95 சதவீத அர்த்தங்களில்தான் பெரும்பான்மையாக CON என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது எனவே அவற்றை இங்கே பார்ப்போம்...

முதலாவதாக to cheat for money என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது பணத்திற்காக ஒருவரை ஏமாற்றுதல் என்று அர்த்தம்.

இந்த அர்த்தத்தில் CON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது  VERB ஆகவும் பயன்படுத்தலாம் NOUN ஆகவும் பயன்படுத்தலாம்.

In a sentence
One of his friends conned some money out of his savings என்று சொல்லலாம் அதாவது அவனது நண்பர்களில் ஒருவன் அவனது சேமிப்பிலிருந்து கொஞ்ச பணத்தை ஏமாற்றி பெற்றான் என்று அர்த்தம்.

He is a con-artist என்று சொல்லலாம் அதாவது அவன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று அர்த்தம் அல்லது அவன் பிறரை ஏமாற்றி பணத்தை பறிப்பவன் என்று அர்த்தம்.

Meaning
இரண்டாவதாக PRISONER என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது குற்றவாளி அல்லது சிறையில் இருக்கிறவர் என்று அர்த்தம்.

In a sentence
‌She is an ex-con என்று சொல்லலாம் அதாவது அவள் சிறையில் இருந்த ஒரு குற்றவாளி என்று அர்த்தம்.

Meaning
மூன்றாவதாக இந்த வார்த்தையை disadvantage என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது குறை என்று அர்த்தம்.

In a sentence
The biggest con of this mobile is it does not have 5G என்று சொல்லலாம் அதாவது
இந்த மொபைலின் மிகப்பெரிய குறை என்னவென்றால், இதில் 5ஜி கிடையாது என்று அர்த்தம்.

He is interested in writing the pros and cons of the electronic goods.
அவர் எலக்ட்ரானிக் பொருட்களின் நிறைகள் மற்றும் குறைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

எனவே நண்பர்களே! தமிழில் ஏமாற்றி பெறுதல் அல்லது ஏமாற்றி பணத்தை பறிப்பவன் அல்லது குற்றவாளி அல்லது சிறையில் இருக்கிறவர்  அல்லது குறை போன்ற அர்த்தங்களில் இந்த CON என்ற இந்த வார்த்தையை  பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...