Know the word CONSPIRE...

Word of the day is CONSPIRE...
Pronunciation
/kənˈspɑɪər/

Function
The word CONSPIRE is a verb.

Meaning
It means to make secret plans jointly to commit an unlawful or harmful act என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய செயலைச் செய்ய இரகசியத் திட்டங்களை தீட்டுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒற்றுமையே பலம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த ஒற்றுமை என்னும் பலத்தை சதி செய்வதற்கு பயன்படுத்துகிற இடத்தில் இந்த CONSPIRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதாவது நண்பர்களே! இந்த CONSPIRE என்ற இந்த வார்த்தையானது இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து ஒரே நோக்கம் கொண்டவர்களாக மற்றொருவருக்கு எதிராக, சட்டத்திற்கு புறம்பாக மேலும் இரகசியமாக சதி செய்ய திட்டங்கள் தீட்டும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தையாகும்.

அந்த சதி திட்டமானது ஒரு நபருக்கு எதிராக இருக்கலாம் அல்லது ஒரு நபரின் விருப்பத்திற்கு எதிராக இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனத்திற்கு எதிராக இருக்கலாம் அல்லது ஒரு அரசாங்கத்திற்கு எதிராக கூட இருக்கலாம்.

இவ்வாறாக தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஒரு குழுவாக இணைந்து சதி திட்டங்கள் தீட்டும் பொழுது CONSPIRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் CONSPIRE என்ற இந்த வார்த்தையை உருவகமாக பயன்படுத்தலாம் அதாவது ஒரு குடும்பமாக இணைந்து அல்லது நண்பர்களாக இணைந்து ஒரு இடத்திற்கு செல்வதற்காக கிளம்பி இருக்கின்ற அந்த வேளையில் மழை பெய்து அல்லது ஏதாவது ஒன்று நிகழ்ந்து நமது அந்த நல்ல திட்டத்தையே  சீர்குலைக்கும் பொழுது இந்த CONSPIRE என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதாவது நாம் தமிழில் சில நேரங்களில் "மழை பெய்து சதி செய்தது" என்று சொல்லுவோம்.  அந்த இடத்திலே இந்த CONSPIRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சதி செய்தல் அல்லது இரகசிய திட்டம் தீட்டுதல் என்கிற அர்த்தத்தில் இந்த CONSPIRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
They conspired to rob the bank and so they were arrested.
அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்க இரகசிய திட்டம் தீட்டினார்கள் அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

The rain conspired them from going on a picnic.
மழை அவர்களை சுற்றுலா செல்ல விடாமல் சதி செய்தது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சதி செய்தல் அல்லது இரகசிய திட்டம் தீட்டுதல் என்கிற அர்த்தங்களில் இந்த CONSPIRE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...