Know the word DEFAULTER...
Word of the day is DEFAULTER...
/dɪˈfɒltər/
Function
The word DEFAULTER is a noun.
Meaning
It refers to a person who fails to fulfill an obligation or perform a task, especially a legal or financial one என்று சொல்லலாம் அதாவது சட்டம் சார்ந்தோ அல்லது நிதி சார்ந்தோ செய்யப்பட வேண்டிய ஒரு வேலையை அல்லது கடமையை செய்ய தவறியவர் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் நிதி சார்ந்து ஒருவர் அவரது கடமையை செய்ய தவறும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை அவர் திருப்பி செலுத்த வேண்டிய காலத்தில் செலுத்த தவறும் பொழுது அவரை DEFAULTER இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
சட்டம் சார்ந்து என சொல்லும் பொழுது ஒருவர் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரியை கட்ட தவறும் பொழுது அவரை இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆஜராகும் படி நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்படும் பொழுது அந்த நாளில் அந்த நபர் ஆஜராக தவறும் பொழுது அவரை இதை DEFAULTER என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
மேலும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பாக ஒரு போட்டியில் பங்கெடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் பொழுது அவர் அந்தப் போட்டியில் பங்கெடுக்க தவறும் பொழுது அவரை இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
இவ்வாறாக ஒருவர் சட்டம் சார்ந்தோ அல்லது நிதி சார்ந்தோ அவர் ஆற்ற வேண்டிய கடமையை செய்ய தவறும் பொழுது அந்த நபரை குறிக்க இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் செலுத்தாதவர், திருப்பி செலுத்தாதவர், தவறியவர், கடமை தவறியவர், தவணை தவறியவர் என்கிற அர்த்தங்களில் இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The number of loan defaulters is increasing everyday.
கடனை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
It is said that the tax defaulters will be imprisoned.
வரி செலுத்தாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் செலுத்தாதவர், திருப்பி செலுத்தாதவர், தவறியவர், கடமை தவறியவர், தவணை தவறியவர் என்கிற அர்த்தங்களில் இந்த DEFAULTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக