Know the word DEFRAUD...

Word of the day is DEFRAUD...
Pronunciation
/dɪˈfrɑːd/

Function
The word DEFRAUD is a verb.

Meaning
It means to take or keep something illegally from someone by deceiving the person என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமாக ஒருவரை ஏமாற்றி அவருடையது எதையாவதொன்றை வைத்திருப்பது அல்லது எடுத்துக்கொள்வது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு நபரை மற்றொரு நபர் பணத்திற்காகவோ அல்லது ஏதாவது ஒரு பொருளுக்காகவோ மோசடி செய்து ஏமாற்றும் பொழுது அந்த நபரை FRAUD என்று ஆங்கிலத்தில் சொல்லுவோம். 

அந்த FRAUD என்ற அந்த ஏமாற்றுக்காரன் செய்கிற அந்த மோசடி செயலை குறிக்க இந்த DEFRAUD என்ற இந்த VERB ஐ ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம்.

நண்பர்களே! இன்றைய காலகட்டத்தில் இமெயில் மூலமாக குறுஞ்செய்தி மூலமாக whatsapp மூலமாக அலைபேசி மூலமாக என எல்லா வகையிலும் மோசடி செய்பவர்கள் மோசடி செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே எப்பொழுதும் கவனமாக இருங்கள்.

எனவே தமிழில் மோசடி செய்தல் அல்லது ஏமாற்றுதல் என்ற அர்த்த்தில் இந்த DEFRAUD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I was defrauded by a fraud.
நான் மோசடி செய்பவனால் மோசடி செய்யப்பட்டேன்.

His own friend whom he believed so much defrauded him.
அவர் மிகவும் நம்பிய அவருக்கு நெருக்கமான நண்பரே அவரை ஏமாற்றினார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மோசடி செய்தல் அல்லது ஏமாற்றுதல் என்ற அர்த்தத்தில் இந்த DEFRAUD என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...