Know the word DESIST...

Word of the day is DESIST...
Pronunciation
/dɪˈsɪst/

Function
The word DESIST is a verb.

Meaning
It means to stop doing something என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை செய்வதை நிறுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த DESIST என்று இந்த வார்த்தையானது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் STOP என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் இந்த DESIST என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒருவர் மிகவும் விருப்பமாக செய்து கொண்டிருக்கின்ற ஒரு செயலை செய்யாதே என்று வலியுறுத்துகின்ற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு பள்ளி மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாது எந்நேரமும்  மிகவும் விருப்பமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்துமாறு அல்லது தவிர்க்குமாறு  வலியுறுத்துகிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை இந்த DESIST என்ற இந்த வார்த்தை.

எனவே இவ்வாறு ஒருவர் விருப்பமாக செய்கின்ற ஒரு செயலை தவிர்க்குமாறு அல்லது நிறுத்துமாறு வலியுறுத்துகிற இடத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த DESIST என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து FROM என்ற வார்த்தை வர வேண்டும்.

மேலும் இந்த DESIST என்ற இந்த வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் CEASE என்ற வார்த்தையை சொல்லலாம்.

எனவே தமிழில் நிறுத்துதல் அல்லது தவிர்த்தல் என்கிற அர்த்தத்தில் இந்த DESIST என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
If he desist from playing video games, he will score high marks.
அவன் வீடியோ கேம்களை விளையாடுவதைத் தவிர்த்தால், அவன் அதிக மதிப்பெண்களைப் பெறுவான்.

Kindly desist from calling me at late night.
தயவுசெய்து பின்னிரவு நேரங்களில் என்னை அழைப்பதை நிறுத்தவும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நிறுத்துதல் அல்லது தவிர்த்தல் என்கிற அர்த்த்தில் இந்த DESIST என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...