Know the word EMBLAZON...
Word of the day is EMBLAZON...
/ɪmˈbleɪ.zən/
Function
The word EMBLAZON is a verb.
Meaning
It means to print or decorate something in a very noticeable way என்று சொல்லலாம் அதாவது எதையாவது ஒன்றை நன்கு தெரிகின்ற வகையில் அலங்கரித்தல் அல்லது அச்சிடுதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த EMBLAZON என்ற இந்த வார்த்தையானது ஏதாவது ஒரு பொருளை, அந்தப் பொருளானது ஒருவர் அணியும் ஆடையாக இருக்கலாம் அல்லது ஒரு வீட்டின் சுவராக இருக்கலாம் அல்லது விளையாட பயன்படுத்தப்படுகின்ற பேட் ஆக இருக்கலாம் அல்லது பந்தாக இருக்கலாம், இவ்வாறாக ஏதாவது ஒரு பொருளை ஏதாவது அடையாளங்களைக் கொண்டோ அல்லது ஏதாவது எழுத்துக்களை கொண்டோ அல்லது ஏதாவது குறியீடுகளைக் கொண்டோ அல்லது ஏதாவது சின்னங்களை கொண்டோ அலங்கரிக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த EMBLAZON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் இவ்வாறாக ஒரு பொருளையோ அல்லது ஒரு இடத்தையோ ஒரு சின்னத்தை கொண்டோ அல்லது எழுத்துக்களை கொண்டோ அல்லது குறியீடுகளைக் கொண்டோ அலங்கரிக்கும் பொழுது அது ஒரு வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனவே அது எல்லோருடைய கண்களிலும் நன்கு தெளிவாக தெரியும் படி அச்சிடப்பட்டிருக்கும். எனவே இவ்வாறு நன்கு தெளிவாகத் தெரியும் படி அச்சிடப்படும் பொழுது அந்த இடத்திலே EMBLAZON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
எனவே தமிழில் அச்சிடுதல் அல்லது பொறித்தல் அல்லது அலங்கரித்தல் போன்ற அர்த்தங்களில் இந்த EMBLAZON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He wants to emblazon his name in large letters in the car.
காரில் அவனது பெயரை அவன் பெரிய எழுத்துக்களில் பொறிக்க விரும்புகிறான்.
She told that the company logo must be emblazoned everywhere.
நிறுவனத்தின் சின்னமானது எல்லா இடங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்று அவள் சொன்னாள்.
Practice it
எனவே நண்பர்களே! அச்சிடுதல் அல்லது பொறித்தல் அல்லது அலங்கரித்தல் என்கிற அர்த்தங்களில் இந்த EMBLAZON என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக