Know the word FORGO...
Word of the day is FORGO...
Pronunciation
/fɔːrˈɡoʊ/
Function
The word FORGO is a verb.
Meaning
It means to give up or do without something என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை கைவிடுதல் அல்லது விட்டுக் கொடுத்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த FORGO என்ற இந்த வார்த்தையை நமக்கு ரொம்ப பிடித்த ஒரு விஷயத்தை செய்வதை விட்டுக் கொடுத்தல் அல்லது கைவிடுதல் என்கிற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
நமக்கு ரொம்ப பிடித்த ஒரு விஷயம் என்று சொல்லும் பொழுது அது மனதளவில் இருக்கலாம் அல்லது உடல் அளவில் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக குளிர் காலத்தில் காலை நேரத்தில் இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக தூங்குவது உடலுக்கு சுகமாக இருக்கும் அந்த சுகத்தை விட்டுக் கொடுத்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.
அதைப் போலவே கால் போன போக்கில் வாழ்வது மனதிற்கு சுகமாக இருக்கும் அந்த சுகத்தை விட்டுக் கொடுத்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.
மேலும் ஒருவர் அவரது உரிமையை விட்டுக் கொடுக்கிற இடத்திலும் கூட FORGO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒருவர் அவரது தங்கைக்காக அல்லது அக்காவிற்காக அல்லது யாராவது ஒருவருக்காக அவரது உரிமைச் சொத்தை விட்டுக் கொடுக்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் கைவிடுதல் அல்லது விட்டுக் கொடுத்தல் அல்லது துறத்தல் என்கிற அர்த்தத்தில் இந்த FORGO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
If you forgo your laziness, you will become successful but if you forgo your ego, you will become beautiful.
நீ உனது சோம்பேறித்தனத்தை கைவிட்டால், நீ வெற்றியடைவாய் ஆனால் நீ உனது ஈகோவை கைவிட்டால், நீ அழகாக இருப்பாய்.
He forwent his property for the sake of his own sister.
அவர் தனது சொந்த சகோதரிக்காக தனது சொத்தை விட்டுக்கொடுத்தார்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கைவிடுதல் அல்லது விட்டுக் கொடுத்தல் அல்லது துறத்தல் என்கிற அர்த்தங்களில் இந்த FORGO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக