Know the word FRENETIC...

Word of the day is FRENETIC...
Pronunciation
/frəˈnet.ɪk/

Function
The word FRENETIC is an adjective.

Meaning
It means fast and energetic in an uncontrolled way என்று சொல்லலாம் அதாவது வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் கட்டுப்பாடற்ற முறையிலும் இருக்கக்கூடிய என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் செய்யக்கூடிய ஒரு செயலில் அல்லது வேலையில் சந்தோஷமும், பரபரப்பும், குளறுபடியும் இருக்கும் பொழுது அந்த செயலை அல்லது அந்த வேலையை இந்த FRENETIC என்ற இந்த ADJECTIVEஐ பயன்படுத்தி விவரிக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்திற்கு ஒரு ஒரு கோடி ப்ராஜெக்ட் ஒன்று கையெழுத்தாகிறது என்று வைத்துக் கொள்வோம் ஆனால் அதே நேரத்தில் அந்த ப்ராஜெக்டை முடிப்பதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாதம் மட்டுமே என்று வரும் பொழுது அந்த நிறுவனமானது அந்த ப்ராஜெக்டை ஒரு மாதத்திற்குள் முடிப்பதற்கு முனைப்பு காட்டும் பொழுது அந்த வேலையில் சந்தோஷமும் இருக்கும் பரபரப்பும் இருக்கும் அதே நேரத்தில் குளறுபடியும் இருக்கும் எனவே அப்படிப்பட்ட அந்த வேலையை குறிப்பதற்கு இந்த FRENETIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே உங்களது வீட்டிற்கு உங்களுக்கு ரொம்ப பிடித்த விருந்தாளிகள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அதே நேரத்தில் அந்த விருந்தாளிகள் வீட்டிற்கு வருகிறார்கள் என்ற தகவல் உங்களுக்கு ஒரு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் சொல்லப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் அந்த நேரத்தில் அவர்களை உபசரிப்பதற்காக நீங்கள் செய்கின்ற அந்த செயல்களில் சந்தோஷமும் இருக்கும் பரபரப்பும் இருக்கும் குளறுபடியும் இருக்கும் எனவே அப்படிப்பட்ட அந்த செயலை குறிப்பதற்கு இந்த FRENETIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது பிடிக்காது என்றும் சொல்ல முடியாது ஆனால் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு நேரமாவது இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை எல்லோரும் கடந்திருப்போம்.

எனவே தமிழில் வெறித்தனமான என்கிற அர்த்தத்தில் இந்த FRENETIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் சந்தோஷமும் பரபரப்பும்  குளறுபடியும் கலந்த ஒரு நிலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

In a sentence
We worked in a frenetic pace last month.
நாங்கள் கடந்த மாதம் வெறித்தனமான வேகத்தில் வேலை செய்தோம்.

I am exhausted with a frenetic pace of life in the company.
நிறுவனத்தில் வாழ்க்கை வெறித்தனமான வேகத்தில் இயங்குவதால் நான் சோர்வடைகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் வெறித்தனமான என்கிற அர்த்த்தில் இந்த FRENETIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...