Know the word HYPOCRITE...
Word of the day is HYPOCRITE...
/ˈhɪp.ə.krɪt/
Function
The word HYPOCRITE is a noun.
Meaning
It refers to a person who professes beliefs and opinions that he or she does not hold in order to conceal his or her real feelings or motives என்று சொல்லலாம் அதாவது ஒருவரது உண்மையான உணர்வுகள் அல்லது நோக்கங்களை மறைப்பதற்காக அவர் பின்பற்றாத நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு நபர் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் பொழுது அந்த நபரை இந்த HYPOCRITE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் பொதுநலவாதி போல், ஏழை எளியவர்களுக்காக சிறுபான்மையினருக்காக உழைப்பவர்கள் போல், பிறரை அன்பு செய்பவர்கள் போல் பிறருடைய நலனுக்காக அரும்பாடு படுபவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்வார்கள் ஆனால் உண்மை அதுவாக இருக்காது.
இப்படிப்பட்டவர்கள் சுற்றுச்சூழலின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கிறவர்களாக தங்களை காட்டிக் கொள்வார்கள் ஆனால் உண்மை அதுவாக இருக்காது.
இவர்களைத்தான் வள்ளலார்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்றை பேசி திரிபவர்கள் என்று கூறுகிறார்.
இவர்களைத்தான் இயேசு கிறிஸ்து வெள்ளையடித்த கல்லறைகள் என்று சொல்கிறார் ஏனென்றால் கல்லறைகள் வெளியே வெள்ளையடித்து வண்ணம் பூசி பார்ப்பவர்கள் கண்களை கவரும் விதமாக அமைந்திருக்கும் ஆனால் உள்ளே இருப்பதோ அழுகிய உடல்களே!
எனவே தமிழில் வெளிவேடக்காரர், நயவஞ்சகர், கபடமாக நடிப்பவர் போன்ற அர்த்தங்களில் இந்த HYPOCRITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He is a hypocrite.
அவர் ஒரு வெளிவேடக்காரர்.
Sometimes it is hard to find out the hypocrites.
சில நேரங்களில் கபடமாக நடிப்பவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் வெளிவேடக்காரர், நயவஞ்சகர், கபடமாக நடிப்பவர் போன்ற அர்த்தங்களில் இந்த HYPOCRITE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக