Know the word MNEMONIC...

Word of the day is MNEMONIC...
Pronunciation
/nɪˈmɑː.nɪk/

Function
The word MNEMONIC can be used as noun and adjective.

Meaning
It refers to a device such as a pattern of letters, ideas, or associations that assists in remembering something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் எழுத்துக்கள், யோசனைகள் அல்லது அது சார்ந்த சாதனங்கள் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த MNEMONIC என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயம் மறந்துவிடாமல் ஞாபகமாக இருப்பதற்காக நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள், குறிப்புகள், யோசனைகள் மற்றும் செயல்களை குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக ENGLISH GRAMMAR இல் IF CLAUSE ஐ மாணவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக கீழ்காணும் குறிப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

If + V1, will - அதாவது வாக்கியத்தின் முதல் பகுதியில் IF மற்றும் V1 வந்தால் வாக்கியத்தின் இரண்டாவது பகுதியில் WILL வரும்.

If + V2 , would - அதாவது வாக்கியத்தின் முதல் பகுதியில் IF மற்றும் V2 வந்தால் வாக்கியத்தின் இரண்டாவது பகுதியில் WOULD வரும்.

If + had + V3, would have - அதாவது வாக்கியத்தின் முதல் பகுதியில் IF மற்றும் HAD + V3 வந்தால் வாக்கியத்தின் இரண்டாவது பகுதியில் WOULD HAVE வரும்.

அதைப்போலவே கணிதத்தில் All Silver Tea Cups என்று Trigonometry பகுதியில் பயன்படுத்துவார்கள் அதாவது எந்த கால் பகுதியில் எந்த திரிகோணமிதி விகிதங்கள் மிகை எண்ணாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதற்காக.

அதைப்போலவே சில நேரங்களில்  மாணவர்களிடம் ஆசிரியர் பள்ளி கட்டணம் வீட்டில் வாங்கி வர சொல்லும் பொழுது அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்காக கைவிரலில் RUBBER BAND ஐ சுத்தி வைப்பார்கள் அல்லது மற்றொரு மாணவனை நொள்ளிவிடச் சொல்வார்கள்.

இவ்வாறாக படிப்பு சார்ந்தோ அல்லது செய்ய வேண்டிய ஒரு செயல் சார்ந்தோ அதனை மறந்து விடாதபடிக்கு நினைவில் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் எழுத்துக்கள், குறிப்புகள், யோசனைகளை இந்த MNEMONIC என்ற இந்த வார்த்தையானது குறிக்கிறது.

எனவே தமிழில் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது நினைவுக் குறிப்பு என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது நினைவில் வைக்க உதவும் என்கிற அர்த்தத்தில் இந்த MNEMONIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
All Silver Tea Cups is a mnemonic that is used in Trigonometry.
All Silver Tea Cups என்பது திரிகோணமிதியில் பயன்படுத்தப்படும் ஒரு நினைவு குறிப்பு ஆகும்.

A good teacher comes out with lot of mnemonic ideas in order to help the students in their studies.
ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் படிப்பில் உதவுவதற்காக நிறைய நினைவில் வைக்க உதவும் யோசனைகளை சொல்லிக் கொடுப்பார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது நினைவுக் குறிப்பு என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துங்க அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது நினைவில் வைக்க உதவும் என்கிற அர்த்தத்தில் இந்த MNEMONIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...