Know the word MUSE...
Word of the day is MUSE...
/mjuːz/
Function
The word MUSE can be used as verb and noun.
Meaning
இதனை verb ஆக பயன்படுத்தும் பொழுது It means to think about something carefully and for a long time என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை கவனமாகவும் நீண்ட காலமாகவும் சிந்தித்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த MUSE என்ற இந்த வார்த்தையானது ஏதாவது ஒரு கலையை பற்றி நீண்ட காலமாக சிந்தித்தல் என்கிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை ஆகும். கலை என்று சொல்லும் பொழுது அது ஒரு கதையாக இருக்கலாம் அல்லது கற்பனை காவியமாக இருக்கலாம் அல்லது ஒரு ஓவியமாக இருக்கலாம் அல்லது ஒரு இசையாக இருக்கலாம் அல்லது ஒருவரின் சாதனையாக இருக்கலாம் அல்லது வேதனையாக இருக்கலாம்.
அதாவது நண்பர்களே! வாழ்க்கையில் பிரச்சனை என்று ஒன்று வரும் பொழுது அந்தப் பிரச்சனை எப்படி வந்தது அந்த பிரச்சனை இனிமேலும் வராதபடி எப்படி பார்த்துக் கொள்ளலாம் என்று பல நாட்களாக, இரவு பகலாக சிந்திக்கிற ஒரு இடத்தில் இந்த MUSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒரு எழுத்தாளர் ஒரு கதையை எழுதும் பொழுது அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் மேலும் அந்த கதாபாத்திரங்கள் பேச வேண்டிய வசனங்கள் ஆகியவற்றை ஒரு நாள் அல்லது இரு நாளில் எழுதிவிட முடியாது மாறாக பல நாட்களாக பல வாரங்களாக பல மாதங்களாக சிந்தித்து இரசித்து ருசித்து எழுத வேண்டி வரும் சில கதைகள் பல வருடங்களாக கூட எழுதியது உண்டு.
இவ்வாறாக ஒரு நபர் ஒரு விஷயத்தை குறித்து அல்லது ஒரு கலையை குறித்து நீண்ட காலமாக சிந்திக்கிற ஒரு இடத்தில் MUSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே MUSE என்ற இந்த வார்த்தையை verb ஆக பயன்படுத்தும் பொழுது தமிழில் ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து தியானித்தல் அல்லது நீண்ட காலமாக சிந்தித்தல் அல்லது யோசித்தல் அல்லது நினைவில் கொள்ளுதல் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
இதனை noun ஆக பயன்படுத்தும் பொழுது It refers to a person, or an imaginary being or force that gives someone ideas and helps them to write, paint, or make music என்று சொல்லலாம் அதாவது ஒருவர் கதை, ஓவியம் அல்லது இசை போன்றவற்றை உருவாக்க உதவியாக இருக்கும் அல்லது உந்து சக்தியாக இருக்கும் ஒரு நபரை அல்லது ஒரு கற்பனை திறனை குறிக்கிறது என்று அர்த்தம்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த MUSE என்ற இந்த வார்த்தையானது கிரேக்க நாட்டைச் சார்ந்த கலைகளுக்கு தேவதைகளாக, தெய்வங்களாக வழிபடப்படுகின்ற ஒன்பது தெய்வங்களை (Muses) குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது மனிதனுக்குள் தோன்றும் கலைகள் எல்லாவற்றிற்கும் உந்து சக்தியாக அல்லது ஊற்றாக இருக்கும் தெய்வங்களாக இவை பார்க்கப்படுகின்றன.
எனவே ஒரு மனிதனுக்குள் தோன்றும் கலைக்கு உந்து சக்தியாக இருக்கும் மற்றொரு மனிதனை அல்லது ஒரு யோசனையை அல்லது ஒரு காரணியை MUSE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
எனவே noun ஆக பயன்படுத்தும் பொழுது தமிழில் கலை தேவதை அல்லது கலையின் உந்துசக்தி அல்லது கலையின் காரணி என்கிற அர்த்தங்களில் இந்த MUSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
I mused through the night on how to tackle this problem.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று இரவு முழுவதும் நான் ஆழ்ந்து சிந்தித்தேன்.
His life is the muse of this story.
அவரது வாழ்க்கையே இந்தக் கதையின் காரணியாகும்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஆழ்ந்து சிந்தித்தல் அல்லது ஆழ்ந்து தியானித்தல் அல்லது நீண்ட காலமாக சிந்தித்தல் அல்லது யோசித்தல் அல்லது நினைவில் கொள்ளுதல் மேலும் கலை தேவதை அல்லது கலையின் உந்துசக்தி அல்லது கலையின் காரணி என்கிற அர்த்த்தில் இந்த MUSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக