Know the word ONUS...

Word of the day is ONUS...
Pronunciation
/ˈoʊ.nəs/

Function
The word ONUS is a noun.

Meaning
The word ONUS is used to refer to something that is one's duty or responsibility என்று சொல்லலாம் அதாவது ONUS என்ற இந்த வார்த்தையானது ஒருவரின் கடமை அல்லது பொறுப்பாக இருக்கின்ற ஒன்றை குறிக்க பயன்படுகிறது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த ONUS என்ற இந்த வார்த்தையானது ஒருவர் மேல் சுமத்தப்பட்ட ஒரு வேலையை அல்லது ஒரு கடமையை அல்லது ஒரு பொறுப்பை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக நாம் தமிழில் பயன்படுத்தும் சில வாக்கியங்களை பார்ப்போம். 

1) இந்த வேலையை முழுமையாக செய்ய வேண்டிய பொறுப்பு உன்னுடையது.

2) ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.

3) நாட்டு மக்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

4) பெற்றோர்களை ஒழுங்காக பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை.

இப்படியெல்லாம் ஒருவரின் பொறுப்பாகவும் கடமையாகவும் சொல்லும் பொழுது அந்த பொறுப்பும் கடமையும் அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு சுமையாகவே பார்க்கப்படும். மேலும் அந்த பொறுப்பையும் அந்த கடமையையும் அவர் செய்ய தவறும் பொழுது அது ஒரு பழியாக மாறிவிடும். எனவே இப்படிப்பட்ட இடத்தில் இந்த ONUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது மிகவும் சிறப்பாக இருக்கும்.

எனவே தமிழில் பொறுப்பு அல்லது கடமை என்கிற அர்த்தத்தில் இந்த ONUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் நண்பர்களே! இந்த ONUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது அதற்கு முன்னால் ‌THE என்ற வார்த்தையை சேர்த்து பயன்படுத்த வேண்டும் எனவே THE ONUS என்றே பயன்படுத்த வேண்டும்.

In a sentence
The onus is on you to take care the kids.
குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது.

The onus is on the management to give a proper salary for the workers.
தொழிலாளர்களுக்கான ஒழுங்கான சம்பளத்தை வழங்க வேண்டிய பொறுப்பு நிர்வாகத்திற்கு உள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பொறுப்பு அல்லது கடமை என்கிற அர்த்தத்தில் இந்த ONUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...