Know the word PROFFER...

Word of the day is PROFFER...
Pronunciation
/ˈprɑː.fɚ/

Function
The word PROFFER can be used as verb and noun.

Meaning
It means present something for acceptance or rejection என்று சொல்லலாம் அதாவது ஏற்றுக் கொள்வதற்காகவோ அல்லது நிராகரிப்பதற்காகவோ ஏதாவது ஒன்றை முன் வைத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! மிகவும் எளிதாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்  PROFFER என்ற இந்த வார்த்தையை OFFER என்ற ஆங்கில வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

அதாவது ஒருவர் மற்றொருவருக்கு ஏதாவது ஒன்றை கொடுத்தல் அல்லது வழங்குதல் அல்லது முன்வைத்தல் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஏதாவது ஒன்றை கொடுத்தல் என்று சொல்லும் பொழுது அது ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது பணமாக இருக்கலாம் அல்லது ஒரு அறிவுரையாக இருக்கலாம் அல்லது ஒரு கருத்தாக இருக்கலாம் அல்லது ஒரு விஷயமாக இருக்கலாம். இவ்வாறாக ஏதாவது ஒன்றை கொடுத்தல் அல்லது வழங்குதல் அல்லது முன்வைத்தல் என்கிற அர்த்தத்தில் இந்த PROFFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் OFFER என்ற வார்த்தைக்கு பதிலாக இந்த PROFFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது நீங்கள் கொடுக்கின்ற ஏதாவது ஒன்றை மிகவும் பணிந்து கொடுக்கின்றீர்கள் என்ற அர்த்தமும் இந்த வார்த்தைக்குள் அடங்கி இருக்கிறது ஏனென்றால் PROFFER = POLITENESS + OFFER என்று சொல்லலாம்.

எனவே PROFFER  என்ற இந்த வார்த்தையானது OFFER என்ற வார்த்தையை விட மிகவும் ஒரு சிறந்த வார்த்தை என்று சொல்லலாம்.

எனவே தமிழில் PROFFER என்ற இந்த வார்த்தையை VERB ஆக பயன்படுத்தும் பொழுது கொடுத்தல் அல்லது வழங்குதல் அல்லது முன்வைத்தல் என்கிற அர்த்தங்களில் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது ஒரு சலுகை அல்லது முன்மொழிவு என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
I proffered him some money but he rejected it.
நான் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன் ஆனால் அவன் அதை நிராகரித்தான்.

Kindly make use of this proffer before it expires.
காலாவதியாகுவதற்கு முன் தயவு செய்து இந்த சலுகையை பயன்படுத்தவும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் PROFFER என்ற இந்த வார்த்தையை VERB ஆக பயன்படுத்தும் பொழுது கொடுத்தல் அல்லது வழங்குதல் அல்லது முன்வைத்தல் என்கிற அர்த்தங்களில் பயன்படுத்துங்க அதே நேரத்தில் NOUN ஆக பயன்படுத்தும் பொழுது ஒரு சலுகை அல்லது முன்மொழிவு என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...