Know the word PROSELYTIZE...

Word of the day is PROSELYTIZE...
Pronunciation
/ˈprɑː.sə.lɪ.taɪz/

Function
The word PROSELYTIZE is a verb.

Meaning
It means to convert or persuade to convert to another religion or belief or idea or opinion என்று சொல்லலாம் அதாவது மதம் மாற்றுவது அல்லது வேறொரு மதத்திற்கு அல்லது நம்பிக்கைக்கு அல்லது ஒரு யோசனைக்கு அல்லது ஒரு கருத்துக்கு மாறுவதற்கு வற்புறுத்துவது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த PROSELYTIZE என்கிற இந்த வார்த்தையானது அடிப்படையில் ஒருவரை ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மாதத்திற்கு மாற்றுவது அல்லது மாற்ற முயற்சி செய்வது அல்லது மாற்றுவதற்கு வற்புறுத்துவது என்கிற அடிப்படையில் தான் ஆரம்ப காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் நாளடைவில் இந்த PROSELYTIZE என்ற இந்த வார்த்தையானது ஒருவரை ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவது என்கிற அடிப்படையில் மட்டும் இல்லாமல் பரவலாக ஒருவர் அவரது கருத்தை அல்லது நம்பிக்கையை அல்லது அவரது யோசனையை மற்றொருவர் மீது திணித்தல் அல்லது மற்றொருவரை பின்பற்ற வைத்தல் என்கிற அடிப்படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொள்கையில் பிடித்தமுள்ள ஒருவர் மற்றொருவரையும் அந்த கொள்கையை எடுத்துரைத்து அவர்களையும் அந்த கட்சியை பின்பற்ற வைக்கிற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மின்சார வாகனங்களே சுற்றுச்சூழலுக்கு நல்லது என்பதை  எடுத்துரைத்து பிறரை மின்சார வாகனங்களை வாங்க வைக்கிற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் காய்கறிகளே சிறந்த உணவு என்பதை எடுத்துரைத்து சைவ உணவை அதிகம் சாப்பிட வைக்கிற இடத்திலே இந்த PROSELYTIZE என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

இவ்வாறாக ஒருவர் அவரது நம்பிக்கையை அல்லது அவரது கருத்தை அல்லது அவரது யோசனையை மற்றொருவருக்கு எடுத்துரைத்து வற்புறுத்தி அவரையும் அந்த நம்பிக்கைக்கு அல்லது அந்த அந்த யோசனைக்கு அல்லது அந்த கருத்துக்கு மாற்றுகிற இடத்திலே இந்த PROSELYTIZE என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்

எனவே தமிழில் மதம் மாற்றுதல் அல்லது மனம் மாற்றுதல் என்கிற அர்த்தத்தில் இந்த PROSELYTIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
He was proselytized by his friend to buy this electric car.
இந்த எலக்ட்ரிக் காரை வாங்குவதற்கு அவன் அவனது நண்பனால் மன மாற்றம் செய்யப்பட்டான்.

She successfully proselytized him to work for her party.
அவள் அவளது கட்சிக்காக பணியாற்ற அவனை வெற்றிகரமாக மனமாற்றம் செய்தாள். 

Practice it
எனவே நண்பர்களே! மதம் மாற்றுதல் அல்லது மனம் மாற்றுதல் என்கிற அர்த்தத்தில் இந்த PROSELYTIZE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...