Know the word RECUPERATE...

Word of the day is RECUPERATE...
Pronunciation
/rɪˈkuː.pər.eɪt/

Function
The word RECUPERATE is a verb.

Meaning
It means to regain a former condition என்று சொல்லலாம் அதாவது பழைய நிலையை மீண்டும் பெறுதல் என்று அர்த்தம்.

ஒரு நபர் நோய் வாய் பட்டதனால் அவர் இழந்த அவரது நல்ல உடல் நலத்தை அல்லது நல்ல உடல் சுகத்தை மீண்டும் திரும்ப பெற்று தனது பழைய நிலையை மீண்டும் அடைகிற அல்லது அடைய முயற்சி செய்கிற இடத்தில் இந்த RECUPERATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் இழந்த தனது சொத்தை அல்லது பணத்தை மீண்டும் திரும்ப பெறுகிற இடத்தில் அல்லது திரும்ப பெற முயற்சி செய்கிற இடத்தில் இந்த RECUPERATE என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவர் பணம் வைத்து விளையாடுகிற ஒரு விளையாட்டில் தனது பணத்தை இழந்த பொழுது மீண்டும் அதே விளையாட்டை விளையாடி தான் இழந்த அந்த பணத்தை மீட்டெடுக்கிற இடத்தில் இந்த RECUPERATE என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு நிறுவனம் தவறான ஒரு முதலீடு செய்து பணத்தை இழக்கிற பொழுது அந்த பணத்தை மீண்டும் மீட்டெடுக்கிற இடத்தில் இந்த RECUPERATE என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு நபர் தான் இழந்த நல்ல உடல் நலத்தையோ அல்லது தான் இழந்த பணத்தையோ திரும்ப பெறுகிற இடத்திலும் மேலும் ஒரு நிறுவனம் தான் இழந்த பணத்தை திரும்ப பெறுகிற இடத்திலும் இந்த RECUPERATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் குணமடைதல் அல்லது திரும்ப பெறுதல் அல்லது மீளுதல் அல்லது பழைய நிலையை அடைதல் என்கிற அர்த்தங்களில் இந்த RECUPERATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He should be given some more time to recuperate after the operation.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைய இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

It will take a long time to recuperate if you do a wrong investment.
நீங்கள் ஒரு தவறான முதலீடு செய்தால், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுக்கும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் RECUPERATE என்ற இந்த வார்த்தையை குணமடைதல் அல்லது திரும்ப பெறுதல் அல்லது மீளுதல் அல்லது பழைய நிலையை அடைதல் என்கிற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...