Know the word RITZY...

Word of the day is RITZY...

Pronunciation

/ˈrɪt.si/

Function
The word RITZY is an adjective.

Meaning
It means expensive and fashionable என்று சொல்லலாம் அதாவது விலையுயர்ந்த மற்றும் நாகரீகமான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த RITZY என்ற இந்த வார்த்தையானது César Ritz என்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த தொழிலதிபரின் பெயரிலிருந்து உருவான ஒரு வார்த்தையாகும்.

1910 களில் London மற்றும் Paris  இல் இவர் நடத்திய Hôtel Ritz உலக தரம் வாய்ந்ததாக உலக புகழ் பெற்றதாக இருந்தது. இந்த ஓட்டல்களில் உலகில் மிகவும் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே தங்கக் கூடியதாக இருந்தது.

இந்த ஓட்டலில் உள்ள அறைகள் மிகவும் சொகுசு நிறைந்ததாக இருந்தது மேலும் அறைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்துமே மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.

இவ்வாறு இருக்கும் பொழுது அந்த  காலகட்டத்தில் வாழ்ந்த F. Scott Fitzgerald என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதைகள் ஒன்றின் தலைப்பாக The Diamond as Big as the Ritz என்று பெயர் சூட்டியிருந்தார். அந்த சிறுகதை நாளடைவில் பிரபலமாகவே Ritz என்ற இந்த வார்த்தையும் பிரபலமாகி நாளடைவில் RITZY என்று ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது.

எனவே இந்த RITZY என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் ஆடம்பரமான, விலை உயர்ந்த, நேர்த்தியான, நாகரிகமான, சொகுசு நிறைந்த என எல்லா வார்த்தையின் அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக பயன்படுத்தப்படுகிறது. எனவே தமிழிலும் அதே அர்த்தங்களில் இந்த RITZY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I don't want to spend my vacation in a ritzy hotel.
எனது விடுமுறையை ஒரு சொகுசு நிறைந்த ஹோட்டலில் கழிக்க நான் விரும்பவில்லை.

Since he has money, he always goes to ritzy resort to spend his time.
அவரிடம் பணம் இருப்பதால், அவர் தனது நேரத்தை செலவழிக்க எப்போதும் ஆடம்பரமான ரிசார்ட்டுக்கு செல்கிறார்.

All her dresses are ritzy.
அவளுடைய ஆடைகள் அனைத்துமே விலை உயர்ந்தவை.

Practice it
எனவே நண்பர்களே! ஆடம்பரமான, விலை உயர்ந்த, நேர்த்தியான, நாகரிகமான, சொகுசு நிறைந்த என்கிற அர்த்தங்களில் இந்த RITZY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...