Know the word SABOTAGE...

Word of the day is SABOTAGE...
Pronunciation
/ˈsæb.ə.tɑːʒ/

Function
The word SABOTAGE can be used as verb and noun.

Meaning
It means to destroy property or hinder normal operations என்று சொல்லலாம் அதாவது சொத்துக்களை அழித்தல் அல்லது இயல்பான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த SABOTAGE என்ற இந்த வார்த்தையானது ஒருவர் வேணுமென்றே பொது சொத்துக்களை அல்லது பிறருடைய சொத்துக்களை சேதப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கிற வகையில் நடந்து கொள்கிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

பொதுவாக இப்படிப்பட்ட செயல்கள் போர்க்காலங்களில் அல்லது தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்கிற காலங்களில் அல்லது கலவரங்கள் நடக்கிற நேரங்களில் அல்லது இரு குழுக்களுக்கிடையே போட்டி நடைபெறுகிற நேரங்களில் அல்லது எதிர் வீட்டாரோடு சண்டை போடுகிற நேரங்களில் நடைபெறும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் கலவர நேரங்களில் கலவரக்காரர்கள் தண்ணீர் பைப்பை உடைத்து தண்ணீரை வீணாக்குதல் அல்லது தொலைபேசி வயரை துண்டித்து தொலைபேசியை பயன்படுத்தாதபடி செய்தல் அல்லது ரயில்வே தண்டவாளங்களை உடைத்து ரயில் போக்குவரத்தை துண்டித்தல் போன்ற இடங்களில் SABOTAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு கிரிக்கெட் விளையாட்டில் பந்துவீச்சாளர் பந்தை கடித்து பந்தின் இயல்பு நிலைய மாற்றுகிற இடத்தில் SABOTAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் verb ஆக பயன்படுத்தும் பொழுது நாசப்படுத்துதல் அல்லது நாசம் செய்தல் என்று பயன்படுத்த வேண்டும் மேலும் noun ஆக பயன்படுத்தும் பொழுது  நாச வேலை என்கிற அர்த்தத்தில் இந்த SABOTAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
They used bomb to sabotage the airport.
அவர்கள் விமான நிலையத்தை நாசப்படுத்த வெடிகுண்டு பயன்படுத்தினார்கள்.

This is a sabotage of the terrorists.
இது தீவிரவாதிகளின் நாசவேலை.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நாசப்படுத்துதல் அல்லது நாசம் செய்தல் அல்லது நாச வேலை என்கிற அர்த்த்தில் இந்த SABOTAGE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...