Know the word SPARE...

Word of the day is SPARE...
Pronunciation
/speər/

Function
The word SPARE can be used as noun, verb and adjective.

Note
நண்பர்களே! இந்த SPARE என்ற இந்த வார்த்தையை நிறைய அர்த்தங்களில் பயன்படுத்தலாம். இந்த அர்த்தங்களை தெரிந்து கொண்டு நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களது ஆங்கிலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

Meaning
முதலாவதாக EXTRA என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு பொருள் தேவையை விட கூடுதலாக அல்லது மிச்சமாக அல்லது உதிரியாக இருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு அர்த்தம்.

In a sentence
It is always important to have a spare tyre.
கூடுதலாக ஒரு டயர் வைத்திருப்பது எப்பொழுதும் முக்கியமானது.

Please lend me if you have a spare pen.
உங்களிடம் மிச்சமாக ஒரு பேனா இருந்தால் எனக்கு கடன் கொடுங்கள்.

Meaning
இரண்டாவதாக SAVE என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது யாராவது ஒருவரோ அல்லது ஏதாவது ஒன்றோ அழிந்து விடாதபடி காப்பாற்றுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
‌The fire service men spared the children first.
தீயணைப்பு துறையினர் முதலில் குழந்தைகளை காப்பாற்றினர்.

Oh! Lord, spare us from our enemies.
ஓ!  ஆண்டவரே, எங்கள் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்.

Meaning
மூன்றாவதாக AVOID என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒருவர் விரும்பத்தகாத ஏதாவது ஒன்றை அனுபவிப்பதை தவிர்த்தல் அல்லது தடுத்தல் என்று அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
I will spare my family members from knowing my sufferings here.
இங்கு நான் படும் துன்பங்களை என் குடும்பத்தினர் அறிவதை தவிர்ப்பேன்.

Meaning
நான்காவதாக TRY HARD என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது கடினமாக உழைத்தல் அல்லது கடினமாக முயற்சித்தல் அல்லது தன்னை முழுமையாக ஈடுபடுத்துதல் அல்லது தனது முழு முயற்சியையும் கொடுத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். 

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது SPARE NO EFFORT அல்லது NOT SPARE ONESELF என்று பயன்படுத்த வேண்டும்.

In a sentence
The police spared no effort to find out the culprit.
குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் கடினமாக முயற்சி எடுத்தனர்.

He did not spare himself in achieving his goal.
அவர் தனது இலக்கை அடைவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
அல்லது அவர் தனது இலக்கை அடைவதில் தனது முழு முயற்சியையும் கொடுத்தார்.

Meaning
ஐந்தாவதாக TO GET VERY ANGRY என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு நபர் ஒரு விஷயத்தை குறித்து மிகவும் பயங்கரமாக கோபப்படும் பொழுது  பயன்படுத்தலாம் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது TO GO SPARE என்ற phraseஆக பயன்படுத்த வேண்டும்.

In a sentence
She went spare when nobody agreed with her.
யாரும் அவளுடன் உடன்படாதபோது அவள் மிகவும் பயங்கரமாக கோபப்பட்டாள்.

எனவே நண்பர்களே! தமிழில் கூடுதலாக அல்லது மிச்சமாக அல்லது உதிரியாக அல்லது காப்பாற்றுதல் அல்லது கடினமாக உழைத்தல் அல்லது கடினமாக முயற்சித்தல் அல்லது தன்னை முழுமையாக ஈடுபடுத்துதல் அல்லது தனது முழு முயற்சியையும் கொடுத்தல் அல்லது மிகவும் பயங்கரமாக கோபப்படுதல் போன்ற அர்த்தங்களில் இந்த SPARE என்ற இந்த வார்த்தையை  பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...