Know the word SPORADIC...

Word of the day is SPORADIC...
Pronunciation
/spəˈræd.ɪk/

Function
The word SPORADIC is an adjective.

Meaning
It means recurring in irregular and unpredictable pattern என்று சொல்லலாம் அதாவது ஒழுங்கற்ற மற்றும் கணிக்க முடியாத வகையில் மீண்டும் நிகழ்கின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு செயலானது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அல்லது ஒழுங்கான ஒரு கால இடைவெளியில் நடைபெறாமல் எப்பொழுதாவது மற்றும் எதிர்பார்த்திராத கால இடைவெளியில் நடைபெறும் போது SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக வீடுகளுக்கு தொடர்ந்து கொடுக்கப்படுகின்ற மின் விநியோகமானது திடீரென்று ஒரு நாள் ஒழுங்கற்ற முறையில் மற்றும் ஒரு சீரற்ற முறையில் தடைபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு நிர்வாகத்தின் கூட்டமானது மாதத்திற்கு ஒருமுறை என்று ஒரு சரியான அல்லது ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறாமல் முதல் மாதத்தில் மூன்று முறையும் அடுத்த மாதத்தில் கூட்டமே இல்லாமலும் அதற்கு அடுத்த மாதத்தில் இரண்டு முறை என ஒரு ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறும் பொழுது அந்த இடத்திலே இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒருவர் தனது தாயை சந்திக்க வாரத்திற்கு இருமுறை அல்லது வாரத்திற்கு மூன்று முறை என ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் செல்லாமல் தனக்கு பார்க்க தோன்றும் பொழுதெல்லாம் பார்த்துவிட்டு செல்கிற இடத்திலே இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இவ்வாறாக ஒரு செயலானது ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறாமல் அவ்வபோது நடைபெறுகிற பொழுது இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் அவ்வபோது என்கிற அர்த்தத்தில் இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The meeting was disturbed sporadically because of the sporadic power supply.
அவ்வபோது கொடுக்கப்பட்ட மின் விநியோகத்தால் கூட்டமானது அவ்வப்போது தடை பட்டது.

His visit to his mom is sporadic.
அவன் அவனது அம்மாவை அவ்வபோது சந்திக்கிறான்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் அவ்வபோது என்கிற அர்த்தத்தில் இந்த SPORADIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...