Know the word SUFFICE...

Word of the day is SUFFICE...
Pronunciation
/səˈfaɪs/

Function
The word SUFFICE is a verb.

Meaning
It means to be enough to meet the need என்று சொல்லலாம் அதாவது தேவையை சந்திக்க போதுமானதாக இருத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த SUFFICE என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தை என்று சொல்லலாம் ஏனென்றால் போதுமானது என்ற வார்த்தையின் வினைச்சொல் வடிவம் தான் அதாவது VERB FORM தான் இந்த SUFFICE என்ற இந்த வார்த்தை.

பெரும்பாலும் இந்த போதுமானது என்ற இந்த வார்த்தைக்கு பிற மொழிகளில் வினைச்சொல் வடிவம் கிடையாது என்பது தான் இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தையாக மாற்றுகிறது.

அதாவது ஒரு விஷயம் அளவிலும் சரி தரத்திலும் சரி போதுமானதாக இருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

அதாவது அளவில் போதுமானதாக இருத்தல் என்று சொல்லும் பொழுது சிலருக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்த இரண்டு வேளை உணவு போதுமானதாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் பலருக்கு மூன்று வேளை உணவும் தேவையாக இருக்கிறது.

தரத்தில் போதுமானதாக இருத்தல் என்று சொல்லும் பொழுது ஒரு காலத்தில் மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் போதுமானதாக இருந்தது ஆனால் இப்பொழுதோ தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் தேவையாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஆன்மீகவாதிகள் சிலருக்கு உணவோ உடையோ தேவையானதாக இருந்தது இல்லை மாறாக கடவுள் மட்டுமே போதுமானவராக இருக்கிறார்.

எனவே தமிழில் போதுமானது அல்லது போதுமானவர் என்ற அர்த்தத்தில் இந்த SUFFICE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The money that I earn suffices to run my life.
நான் சம்பாதிக்கும் பணம் எனது வாழ்க்கையை நடத்த போதுமானது.

This mark suffices for you to enter into a medical College.
மருத்துவக் கல்லூரியில் சேர இந்த மதிப்பெண் உனக்கு போதுமானது.

God alone suffices.
கடவுள் மட்டுமே போதுமானவர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் போதுமானது அல்லது போதுமானவர் என்ற அர்த்தத்தில் இந்த SUFFICE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...