Know the word TRANSGRESSOR...

Word of the day is TRANSGRESSOR...
Pronunciation
/trænzˈɡres.ɚ/

Function
The word TRANSGRESSOR is a noun.

Meaning
It refers to a person who breaks a law or moral rule என்று சொல்லலாம் அதாவது சட்டம் அல்லது ஒழுக்கம் சார்ந்த விதியை மீறும் ஒரு நபர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த TRANSGRESSOR என்ற இந்த வார்த்தையை சின்ன அளவிலும் பயன்படுத்தலாம் பெரிய அளவிலும் பயன்படுத்தலாம்.

சின்ன அளவில் பயன்படுத்தலாம் என்று சொல்லும் பொழுது சாதாரணமாக இரண்டு நபர்களுக்கிடையே இருந்த ஒரு இரகசியத்தை மற்றொருவருக்கு சொல்வதன் மூலமாக அந்த இரகசிய உடன்படிக்கையை ஒருவர் மீறும் பொழுது அந்த நபரை இந்த TRANSGRESSOR என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று சொல்லும் பொழுது ஒருவர் சட்டத்தை மீறும் பொழுது அவரை TRANSGRESSOR என்று சொல்லலாம். அந்த நபர் காரை திருடுபவராக இருக்கலாம் அல்லது கஞ்சா கடத்துபவராக இருக்கலாம்.

இன்னும் சிறப்பாக இந்த வார்த்தையை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நாம் சாதாரணமாக தமிழில் பேசும் பொழுது ஒரு சொல்லாடலை பயன்படுத்துவோம் அதாவது "எல்லையை மீறாதே" என்று.

அவ்வளவுதான் நண்பர்களே! ஒரு நபர் சட்டம் சார்ந்தோ அல்லது ஒழுக்கம் சார்ந்தோ எல்லையை மீறும் பொழுது அவரை TRANSGRESSOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அழைக்கலாம்.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் அவரது மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டு விட்டாலே அவருக்கு இந்த TRANSGRESSOR என்ற இந்த வார்த்தை உரிமையாகிவிடும்.

எனவே தமிழில் மீறுபவர், எல்லை மீறுபவர், சட்டத்தை மீறுபவர், விதிமீறுபவர் என்கிற அர்த்தங்களில் பயன்படுத்தலாம் மேலும் ஆன்மீகத்தின் அடிப்படையில் பாவி என்று அர்த்தத்திலும் இந்த TRANSGRESSOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The government is fixing cameras on the highways to track the transgressors.
விதிமீறுபவர்களை கண்காணிக்க நெடுஞ்சாலைகளில் கேமராக்களை அரசு பொருத்தி வருகிறது.

Nobody is perfect to accuse anyone as transgressor.
யாரையும் பாவி என்று குற்றம் சாட்டுவதற்கு யாரும் சரியானவர்கள் அல்ல.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மீறுபவர், எல்லை மீறுபவர், சட்டத்தை மீறுபவர், விதிமீறுபவர் அல்லது பாவி என்கிற அர்த்தங்களில் இந்த TRANSGRESSOR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...