Know the word UTOPIA...

Word of the day is UTOPIA...
Pronunciation
/juːˈtoʊ.pi.ə/

Function
The word UTOPIA is a noun.

Meaning
It refers to a perfect society in which people work well with each other and are happy என்று சொல்லலாம் அதாவது மக்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து அன்பு செய்து மகிழ்ச்சியாக இருக்குக்கின்ற ஒரு சரியான சமூகம் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த UTOPIA என்ற இந்த வார்த்தையானது அரசியல், சட்டம், சமூகம் என அனைத்துமே சரியான வழியில் சரியான முறையில் நேர்மையாக இயங்குகின்ற ஒரு கற்பனை உலகை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

முதன் முதலில் தாமஸ் மோர் என்ற ஒரு ஆங்கில எழுத்தாளர் அவரது புத்தகத்தில் அரசியல், சட்டம், சமூகம் என அனைத்துமே சரியான வழியில் சரியான முறையில் நேர்மையாக இயங்குகின்ற ஒரு கற்பனை உலகை குறிப்பதற்காக பயன்படுத்திய ஒரு வார்த்தை தான் இந்த UTOPIA என்ற இந்த வார்த்தை. இந்த வார்த்தையானது நாளடைவில் ஆங்கிலத்தில் பேச்சு வழக்கிலும் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது அதனை தொடர்ந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் உண்மை என்னவென்றால் அரசியல் சட்டம் சமூகம் என அனைத்துமே சரியான வழியில் சரியான முறையில் நேர்மையாக இயங்குகின்ற ஒரு சமுதாயத்தை ஒரு நாட்டை ஒரு 
இடத்தை பார்க்கவே முடியாது என்பதுதான். மேலும் ஒரு சின்ன இடத்தில் வாழ்கின்ற மக்கள் கூட ஒருவரை ஒருவர் புரிந்து அன்பு செய்து ஒருவருக்காக மற்றொருவர் வாழ்கின்ற வாழ்க்கையும் கற்பனையில் மட்டுமே சாத்தியமாக அமைகிறது.

எனவே தமிழில் கற்பனை உலகம் அல்லது அன்பான உலகம் அல்லது ஒற்றுமையான உலகம் அல்லது அருமையான உலகம் போன்ற அர்த்தங்களில் இந்த UTOPIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The ruling parties always speak that they have created a society of Utopia.
ஆளுங்கட்சிகள் எப்பொழுதும் ஒரு அன்பான உலகம் போன்ற சமுதாயத்தை உருவாக்கி விட்டதாகவே பேசுவார்கள்.

Even a neighbourhood of Utopia is impossible.
மக்கள் ஒற்றுமையாக அன்பாக வாழ்கின்ற ஒரு சுற்றுப்புறம் கூட சாத்தியமற்றது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கற்பனை உலகம் அல்லது அன்பான உலகம் அல்லது ஒற்றுமையான உலகம் அல்லது அருமையான உலகம் போன்ற அர்த்தங்களில் இந்த UTOPIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...