Know the word WRETCHED...

Word of the day is WRETCHED...
Pronunciation
/ˈretʃ.ɪd/

Function
The word WRETCHED is an adjective.

Meaning
It means very miserable and deep distress என்று சொல்லலாம் அதாவது பரிதாபமான மற்றும் துக்கம் நிறைந்த என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த WRETCHED என்ற இந்த வார்த்தைக்குள் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

அதாவது ஒரு மனிதன் மனதளவில் கஷ்டத்தை வேதனையை அனுபவிக்கும் பொழுது இந்த WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் செய்த பாவத்தினால் அல்லது தவறான ஒரு காரியத்தினால் அல்லது ஒரு நண்பனால் வரும் ஏமாற்றம் அல்லது ஒரு காதலால் வரும் ஏமாற்றும் அல்லது ஒரு கணவனால் அல்லது மனைவியால் வரும் ஏமாற்றும் அல்லது ஒரு உறவினரால் வரும் ஏமாற்றம் என ஒரு மனிதன் மனதளவில் கஷ்டப்படும் பொழுது அந்த நிலையை விவரிக்க இந்த WRETCHED என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு உடல் அளவில் கஷ்டத்தை, வேதனையை அனுபவிக்கும் பொழுதும் அந்த நிலையை விவரிக்க WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான போதுமான உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் அல்லல் படும் பொழுதும் கூட அந்த நிலையை விவரிக்க இந்த WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் ஒரு மனிதன் மனதளவிலோ அல்லது உடல் அளவிலோ அல்லது தான் வாழும் சூழ்நிலையின் காரணமாகவோ சந்தோஷம் இல்லாமல் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டு மனம் நொந்து இருக்கும் ஒரு நிலையை விவரிக்க இந்த WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, மன உளைச்சலான, அவலமான, பரிதாபமான, இழிவான அல்லது மிக எழ்மையான என்கிற அர்த்தங்களில் இந்த WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He lives a wretched life because of his sins.
அவனது பாவத்தின் காரணமாக அவன் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ்கிறான்.

Cinderella's childhood was wretched. There was nobody to help her.
சிண்ட்ரெல்லாவின் குழந்தைப் பருவம் பரிதாபமாக இருந்தது. அவளுக்கு உதவ யாரும் இல்லை.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, மன உளைச்சலான, அவலமான, பரிதாபமான, இழிவான அல்லது மிக எழ்மையான என்கிற அர்த்தங்களில் இந்த WRETCHED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...