know the Idiom BEAT AROUND THE BUSH...

know the Idiom BEAT AROUND THE BUSH
Function
The idiom, BEAT AROUND THE BUSH is a verb.

Meaning
It means to avoid talking about what is important என்று சொல்லலாம் அதாவது முக்கியமானதைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் பேசும் பொழுது அவர் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாக தெளிவாக சொல்லாமல் அதனைத் தவிர பிற கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது பயன்படுத்து வேண்டிய ஒரு idiom என்று சொல்லலாம்.

BEAT AROUND THE BUSH என்ற இந்த IDIOM ஐ BEAT ABOUT THE BUSH என்றும் பயன்படுத்தலாம்.

இதற்கு இணையான தமிழ் சொற்றொடரை சொல்ல வேண்டுமென்றால் சுற்றி வளைத்து பேசுதல் அல்லது கதை கதையாக விடுதல் அல்லது கம்பி கட்டுற கதையெல்லாம் விடுதல் போன்றவற்றை சொல்லலாம்.

இதனுடைய எதிர்பதம் PLAIN SPEAKING என்று சொல்லலாம் அதாவது சொல்ல வந்த கருத்துக்களை நேர்மையாகவும் நேரடியாகவும் சொல்வது என்று அர்த்தம்.

In a sentence
It will be good if you stop beating around the bush.
நீ சுற்றி வளைத்து பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

Nobody likes someone who beats about the bush.
சுற்றி வளைத்து பேசும் ஒருவரை யாருக்கும் பிடிக்காது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த BEAT AROUND THE BUSH என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...