Know the idiom PULL ONE'S LEG...

Idiom is PULL ONE'S LEG...
Function
The idiom, PULL ONE'S LEG is a verb.

Meaning
It means to trick or lie to someone in a playful way என்று சொல்லலாம் அதாவது விளையாட்டாக ஒருவரை ஏமாற்றுவது அல்லது பொய் சொல்வது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த PULL ONE'S LEG என்ற இந்த IDIOM ஆனது நண்பர்கள் மத்தியில் அல்லது சக ஊழியர்கள் மத்தியில் அல்லது நன்கு தெரிந்தவர்கள் மத்தியில் பயன்படுத்த வேண்டிய ஒரு IDIOM என்று சொல்லலாம்.

அதாவது நண்பர்கள் அல்லது சக ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வதற்காக அல்லது கிண்டல் செய்வதற்காக அல்லது சிரித்து மகிழ்வதற்காக ஒருவர் மற்றொருவரை விளையாட்டிற்காக ஏமாற்றி மகிழும் இடத்தில் அல்லது ஏதாவது ஒன்று சொல்லும் இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

இதனை வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது PULL ONE'S LEG என்ற சொற்றொடரில் ONE'S என்ற வார்த்தைக்கு பதிலாக சரியான POSSESSIVE ADJECTIVE (MY, OUR, YOUR, HIS, HER, ITS & THEIR) ஐ பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் சும்மா வம்புக்கு இழுத்தல், விளையாட்டுக்கு ஏமாற்றுதல், விளையாட்டாக கேலி செய்தல் போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He always likes to pull her leg.
அவளை எப்பொழுதும் சும்மா வம்புக்கு இழுப்பது அவனுக்கு பிடிக்கும்.

Don't take it seriously. He just pulls your leg.
அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே அவன் உன்னை விளையாட்டுக்கு ஏமாற்றுகிறான்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த PULL ONE'S LEG என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...