Know the word BARISTA...
Word of the day is BARISTA...
Pronunciation
/bɑːrˈiːs.tə/
Function
The word BARISTA is a noun.
Meaning
It refers to a person who serves customers in a coffee shop என்று சொல்லலாம் அதாவது ஒரு காபி கடையில் வாடிக்கையாளர்களுக்கு காபி பரிமாறும் நபர் என்று அர்த்தம்.
பிரிண்ட்ஸ்! இந்த BARISTA அப்படிங்கிறது யாரு அப்படின்னு சொன்னா இந்த காபி ஷாப்ல வெவ்வேறு வகையான காபி போட தெரிஞ்ச அந்த நபரை தான் BARISTA அப்படின்னு ஆங்கிலத்தில சொல்றாங்க.
பிரிண்ட்ஸ்! கிட்டத்தட்ட ஒரு 25 வகையான காபி இருக்குதுன்னா பாத்துக்கோங்களேன்! நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு காபி தான். அப்படிதானே...?
இந்த BARISTA அப்படிங்கிறவரு கையால ஆத்து ஆத்து அத்தி காபி போடுறவர் கிடையாதுங்க. ESPRESSO MACHINE ஐ பயன்படுத்தி காபி போட தெரிந்தவர்.
BARISTA அப்படின்னு சொன்னதும் அது ஒரு பெண்ணுக்கான வேலைன்னு நினைச்சிடாதீங்க.
இந்த வேலையா ஆணும் செய்யலாம், பெண்ணும் செய்யலாம் அதனால ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவங்க BARISTA தான்
ஒரிஜினலா இந்த BARISTA அப்படிங்கிற இந்த வார்த்தை இத்தாலியில்தான் பயன்படுத்தப்பட்டுச்சு இத்தாலிய பொறுத்த வரைக்கும் BARISTA அப்படின்னு சொன்னீங்கன்னா அவர் வந்து BARல வேலை பாக்குற ஒரு நபர் அவருக்கு வெவ்வேறு வகையான காபியும் செய்ய தெரியும் வெவ்வேறு வகையான சரக்கும் செய்ய தெரியும்.
ஆனா இங்கிலீஷ்ல பொருத்தவரைக்கும் இந்த BARISTA என்ற வார்த்தை வெவ்வேறு வகையான காப்பிய செய்ய தெரிஞ்சவரை மட்டும் தான் குறிக்கிறது. BARISTA அப்படிங்கற இந்த வார்த்தை 1992 ல இருந்துதான் ஆங்கிலத்தில பயன்படுத்திட்டு இருக்காங்க.
In a sentence
If you know how to use the Espresso Machine, you can become a barista.
எஸ்பிரெசோ மெஷினை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் ஒரு பாரிஸ்டா ஆகலாம்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த BARISTA என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக