Know the word BEFOREHAND...

Word of the day is BEFOREHAND...
Pronunciation
/bɪˈfɔːr.hænd/

Function
The word BEFOREHAND can be used as adverb and adjective.

Meaning
It means earlier or in advance or ahead of time என்று சொல்லலாம் அதாவது முன்னதாக அல்லது முன்கூட்டியே அல்லது நேரத்திற்கு முன்பே என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு தகவல் முன்கூட்டியே சொல்லப்படுகிற இடத்தில் அல்லது ஒரு தயாரிப்பு முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய இடத்தில் இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு விருந்தாளி வீட்டிற்கு வருவதை அவர் வருவதற்கு முன்னரே அதனை சொல்லிவிட்டு வரும் பொழுது அந்த இடத்திலே இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒருவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக அல்லது முன் தயாரிப்பாக அவர் அந்த நாட்டிற்கு செல்வதற்கான விசா பெற்றிருக்க வேண்டும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு தகவல் முன்கூட்டியே சொல்லப்படுகிற இடத்தில் அல்லது ஒரு தயாரிப்பு முன்கூட்டியே செய்யப்பட வேண்டிய இடத்தில் இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் நண்பர்களே! இந்த BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் இடத்தில், இந்த வார்த்தைக்கு பதிலாக earlier அல்லது in advance அல்லது ahead of time என்ற ஆங்கில வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் முன் கூட்டியே அல்லது முன்னரே என்ற இடத்தில் இந்த  BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
If you prepare well beforehand, you will do the exam well.
நீ முன் கூட்டியே சிறந்த முறையில் தயார் செய்து கொண்டால், நீ தேர்வை சிறப்பாக செய்யலாம்.

We have to book a taxi beforehand because tomorrow is an auspicious day.
நாளைய தினமானது ஒரு முகூர்த்த நாள் என்பதால், டாக்ஸியை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் முன் கூட்டியே அல்லது முன்னரே என்ற இடத்தில் இந்த  BEFOREHAND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...