Know the word BLURT...

Word of the day is BLURT...
Pronunciation
/blɝːt/

Function
The word BLURT is a verb.

Meaning
It means to say something suddenly and without thinking என்று சொல்லலாம் அதாவது சிந்தனை செய்யாமல் ஏதாவது ஒன்றை திடீரென்று சொல்லிவிடுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் சிறிது கூட சிந்திக்காமல் எதனை பேசக்கூடாது அல்லது எதனை சொல்லக்கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே பேசி விடும் பொழுது அல்லது சொல்லி விடும் பொழுது BLURT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒருவர் பதட்டத்தில் இருக்கும் பொழுது எதனை சொல்ல கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே சொல்லி விடுவார்கள்.

அதைப்போலவே  ஒருவர் அதிகப்படியான சந்தோஷத்தில் இருக்கும் பொழுதும்,  உற்சாகத்தில் நிரம்பியவராய், தன்னிலை மறந்தவராய் எதனை சொல்ல கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே சொல்லி விடுவார்கள்.

அதைப்போலவே ஒருவர் பிறர் முன்னிலையில் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசும் இடத்திலும் இவ்வாறு சிந்தனை செய்யாமல் ஏதாவது ஒன்றை பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறாக ஒருவர் பதட்டத்திலோ அல்லது உற்சாகத்திலோ அல்லது ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவோ எதனை பேசக்கூடாது என்று தனது மனதில் நினைத்திருந்தாரோ அதையே பேசி விடும் பொழுது BLURT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த BLURT என்ற இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது BLURT என்ற இந்த வார்த்தையை தொடர்ந்து OUT என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியது வரும் எனவே இந்த BLURT என்ற இந்த வார்த்தையை BLURT OUT என்ற ஒரு PHRASAL VERB ஆகவும் பார்க்கலாம்.

எனவே தமிழில் உளறுதல் அல்லது உளறி விடுதல் என்ற அர்த்தத்தில் இந்த BLURT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
As I was so scared, unknowingly I blurted out the secrets.
நான் மிகவும் பயந்திருந்ததால், தெரியாமல் ரகசியங்களை உளறிவிட்டேன்.

He blurted everything out about his misbehavior during the exam.
தேர்வின் போது அவன் செய்த தவறுகள் அனைத்தையும் அவன் உளறி விட்டான்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் உளறுதல் அல்லது உளறி விடுதல் என்ற அர்த்தத்தில் இந்த BLURT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...