Know the word BRAG...
Word of the day is BRAG...
/bræɡ/
Function
The word BRAG can be used as verb, noun and adjective.
Note
BRAG என்ற இந்த வார்த்தையை VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது ஒரு அர்த்தத்தை தருகிறது. அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது முற்றிலுமாக மாறுபட்ட வேறொரு அர்த்தத்தை தருகிறது.
Meaning
முதலாவதாக VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது It means to speak too proudly about what one has done or what one owns என்று சொல்லலாம் அதாவது ஒருவர் செய்ததை பற்றியோ அல்லது அவருக்குச் சொந்தமானதைப் பற்றியோ மிகவும் பெருமையாகப் பேசுவது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒருவர் புதிதாக வாங்கி இருக்கும் அவரது மொபைலை பற்றியோ அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடையை பற்றியோ அளவுக்கு அதிகமாக பெருமையாக பேசும் பொழுது சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியவில்லை என்றால் அவர் செய்யும் அந்த செயலை BRAG என்ற இந்த வார்த்தையை கொண்டு விளக்கலாம்.
அதைப்போலவே ஒருவர் செய்த செயலை அல்லது ஒரு சாதனையை போகும் இடமெல்லாம் சொல்லி திரியும் பொழுது அந்த செயலை BRAG என்ற இந்த வார்த்தையை கொண்டு விளக்கலாம்.
இவ்வாறாக ஒருவர் தன்னை பற்றியோ அல்லது தனது சாதனையை பற்றியோ அல்லது தான் வைத்திருக்கும் ஒரு பொருளை பற்றியோ போகும் இடமெல்லாம் பெருமையாக பேசித் திரியும் பொழுது அவர் செய்யும் அந்த செயலை குறிக்க இந்த BRAG என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்கள்.
அதே நேரத்தில் BRAG என்ற இந்த வார்த்தையை ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது it means exceptionally good என்று சொல்லலாம்
அதாவது மிகவும் சிறந்தது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! மிகவும் சிறந்தது ஆகச்சிறந்தது அல்லது இருப்திலேயே BEST என்று அர்த்தம்.
எனவே தமிழில் VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது தற்பெருமை பேசுதல் அல்லது பெருமை அடித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது மிகவும் சிறந்தது அல்லது ஆகச்சிறந்தது என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
Usually, the politicians brag about the development which they have done.
பொதுவாக, அரசியல்வாதிகள் தாங்கள் செய்த வளர்ச்சியைப் பற்றி பெருமை பேசுவார்கள்.
His brag is much better than his fight.
அவன் போடும் சண்டையை விட அவனது தற்பெருமை பரவாயில்லாததாக இருக்கிறது.
They own a brag cornfield.
அவர்கள் மிகவும் சிறந்த சோள வயல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் VERB ஆகவும் NOUN ஆகவும் பயன்படுத்தும் பொழுது தற்பெருமை பேசுதல் அல்லது பெருமை அடித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க அதே நேரத்தில் ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது மிகவும் சிறந்தது அல்லது ஆகச்சிறந்தது என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக