Know the word COMPOSED...
Word of the day is COMPOSED...
/kəmˈpoʊzd/
Function
The word COMPOSED is an adjective.
Meaning
It means calm and in control of emotions என்று சொல்லலாம் அதாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருத்தல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு மனிதனானவன் எரிச்சல், கோபம், வெறுப்பு, சந்தோஷம், பயம், பாசம் என எல்லா வகையான உணர்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டவன் என்பதுதான் உண்மை.
எரிச்சலேப்படாத, கோபமேப்படாத, பயப்படவே செய்யாத, சந்தோஷமேப்படாத, பாசத்தையே காட்டாத ஒரு மனிதனை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே ஒரு மனிதனை எரிச்சல்படவே மாட்டார் அல்லது கோப்படவே மாட்டார் அல்லது பயப்படவே மாட்டார் என்று சொல்வதை விட அவர் அந்த உணர்ச்சிகளை எப்படிப்பட்ட மிகப்பெரிய பதட்டமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி அல்லது பயம்நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அதனை அவர் வெளிக்காட்ட மாட்டார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
இவ்வாறாக ஒரு மனிதனால் எவ்வளவு பெரிய பதட்டமான சூழ்நிலையிலும் பயம்நிறைந்த சூழ்நிலையிலும் கோபம் நிறைந்த சூழ்நிலையிலும் தனது உணர்ச்சியை வெளிக்காட்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அந்த பதட்டமான அல்லது பயம் நிறைந்த சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்ளும் பொழுது அந்த மனிதனை இந்த COMPOSED என்ற இந்த ADJECTIVE ஐ பயன்படுத்தி விவரிக்கலாம்.
எனவே தமிழில் அமைதியாக அல்லது மிகவும் அமைதியாக என்ற அர்த்தத்தில் இந்த COMPOSED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் இந்த COMPOSED என்ற இந்த வார்த்தையை CALM என்ற வார்த்தையோடு இணைத்தே பயன்படுத்துவார்கள் அதாவது he is very calm and composed என்று சொல்வார்கள் அதாவது அவர் மிகவும் அமைதியானவர் என்று அர்த்தம் அதாவது அந்த நபரானவர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அதனை வெளிகாட்டாமல் அமைதியாக இருப்பவர் என்று அர்த்தம்.
In a sentence
Though he was treated so badly in front of his colleagues, he was composed.
சக ஊழியர்கள் முன்னிலையில் அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட போதிலும், அவர் மிகவும் அமைதியாகவே இருந்தார்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் அமைதியாக அல்லது மிகவும் அமைதியாக என்ற அர்த்தத்தில் இந்த COMPOSED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக