Know the word CONFIDANT(E)...

Word of the day is CONFIDANT(E)...
Pronunciation
/ˈkɑːn.fə.dɑːnt/

Function
The word CONFIDANT is a noun.

Meaning
It refers to a person you trust and share your feelings and secrets with என்று சொல்லலாம் அதாவது நீங்க நம்பி உங்களது உணர்வுகளையும் ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நபர்‌ என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நம்முடைய வாழ்க்கையில் நமக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள் அந்த நண்பர்கள் மத்தியிலும் நமது இன்பங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், வெற்றிகளையும் தோல்விகளையும், யாருக்கும் தெரியாத ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வதற்கென்று கண்டிப்பாக ஒரு நபர் இருப்பார். அந்த நபர் மற்ற நண்பர்களை விட மிகவும் நெருக்கமாக இருப்பார். அந்த ஒரு நண்பரைத் தான் இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தையானது குறிப்பிடுகிறது.

நாம் ஏற்கனவே INTIMATE என்று ஒரு வார்த்தை படித்தோம் அந்த வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை தான் இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தை.

மேலும் நண்பர்களே! இந்த CONFIDANT என்ற இந்த வார்த்தையை ஆண் நண்பர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் பெண் நண்பராக இருக்கும் பட்சத்தில் அங்கே CONFIDANTE (ˈkɑːn.fə.dænt) என்று பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் நம்பிக்கையானவர் அல்லது நெருக்கமானவர் அல்லது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் போன்ற அர்த்தங்களில் இந்த CONFIDANT or CONFIDANTE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Everything about him is known to his confidant.
அவரைப் பற்றிய அனைத்தும் அவரது நம்பிக்கையானவருக்குத் தெரியும்.

His sister is her closest confidante.
அவனது சகோதரிதான் அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நம்பிக்கையானவர் அல்லது நெருக்கமானவர் அல்லது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் போன்ற அர்த்தங்களில் இந்த CONFIDANT or CONFIDANTE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...