Know the word CONFIDENT...

Word of the day is CONFIDENT...
Pronunciation
/ˈkɑːn.fə.dənt/

Function
The word CONFIDENT is an adjective.

Meaning
It means being very sure of something என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றின் மீது உறுதியாக இருத்தல் என்று அர்த்தம்.

ஏதாவது ஒன்றின் மீது உறுதியாக இருத்தல் என்று சொல்லும் பொழுது அந்த ஏதாவது ஒன்று என்பது ஒருவரது திறமையாக இருக்கலாம் அல்லது ஒருவரது ஏதாவதொரு திட்டமாக இருக்கலாம் அல்லது ஒருவரோடு பணி புரியும் மற்றொரு நபராக இருக்கலாம் அல்லது ஒருவரின் எதிர்காலமாக கூட இருக்கலாம்.

இவ்வாறாக ஒருவர் தன்மீதோ அல்லது தனது திறமை மீதோ அல்லது பிறர் மீதோ அல்லது பிறரின் திறமை மீதோ அல்லது தான் செய்கின்ற ஒரு செயலின் மீதோ நேர்மறை எண்ணம் கொண்டவராக உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருக்கும் பொழுது இந்த CONFIDENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

நண்பர்களே! நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் குறைந்தபட்சமாக நம்மீதாவது அல்லது நாம் செய்கின்ற செயலின் மீதாவது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் வருகின்ற சவால்களை எதிர்கொள்ளவும் முடியும் சமாளிக்கவும் முடியும்.

எனவே தமிழில் நம்பிக்கை அல்லது உறுதியாக நம்புதல் என்ற அர்த்தத்தில் இந்த CONFIDENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He was so confident that he would win the match.
அவன் இந்த போட்டியில் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்பினான்.

He is so confident in his English proficiency.
அவர் அவரது ஆங்கிலப் புலமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நம்பிக்கை அல்லது உறுதியாக நம்புதல் என்ற அர்த்தத்தில் இந்த CONFIDENT என்ற இந்த வார்த்தையை வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...