Know the word DEBAUCHERY...
Word of the day is DEBAUCHERY...
/dɪˈbɑː.tʃɚ.i/
Function
The word DEBAUCHERY is a noun.
Meaning
It refers to the extreme indulgence in bodily pleasures என்று சொல்லலாம் அதாவது உடல் சார்ந்த இன்பங்களில் அதீத ஈடுபாடு செலுத்துதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! மனிதனுடைய ஆசையை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று உலகம் சார்ந்த ஆசை மற்றொன்று இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட ஆசை அதனை தான் ஆன்மீகம் என்று சொல்கிறோம்.
சாதாரணமாக ஒரு மனிதன் இந்த இரண்டு ஆசைகளில் எந்த ஆசையை கொண்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழும்பொழுது அதற்கு சரியான பதிலாக சொல்லப்படுவது ஒரு மனிதன் சாதாரணமாக இந்த இரண்டு ஆசையையும் சரிவிகிதத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்லப்படுகிறது.
ஒரு மனிதன் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை முற்றிலுமாக மறந்து உலக ஆசையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தும் பொழுது அவன் குடி வெறி, சூதாட்டம், போதை, காம வெறி போன்ற மித மிஞ்சின உடல் ஆசைகளை உள்ளடக்கிய ஒரு ஒழுக்கக்கேடான ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறான்.
மேலும் நண்பர்களே! இந்த உடல் ஆசைகள் ஒரு பொழுதும் நிலையான பேரின்பத்தை தருவது கிடையாது மாறாக இது தரும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தற்காலிகமானது என்பது தான் மறுக்க முடியாத மிகப்பெரிய உண்மை.
இவ்வாறாக மித மிஞ்சின உடல் ஆசைகளை உள்ளடக்கிய ஒழுக்க கேடான ஒரு செயலை குறிக்க DEBAUCHERY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் ஒழுக்கக்கேடான என்ற அர்த்தத்தில் இந்த DEBAUCHERY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் அந்த ஒழுக்கக்கேடானது குடி வெறி, சூதாட்டம், போதை, காம வெறி போன்ற மித மிஞ்சின உடல் ஆசைகளை உள்ளடக்கியது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
In a sentence
He is leading a life of debauchery.
அவன் ஒழுக்கக்கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.
A life of debauchery destroys a person physically and mentally.
ஒழுக்கக்கேடான ஒரு வாழ்க்கை ஒரு நபரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அழிக்கிறது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஒழுக்கக்கேடான என்ற அர்த்தத்தில் இந்த DEBAUCHERY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக