Know the word GOODNESS...
Word of the day is GOODNESS...
/ˈɡʊd.nəs/
Function
The word GOODNESS is a noun.
Note
GOODNESS என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Meaning
முதலாவதாக It refers to the moral excellence of a person என்று சொல்லலாம் அதாவது ஒரு மனிதனின் ஒழுக்கம் சார்ந்த மேன்மை என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுடைய ஒழுக்கம் சார்ந்த விஷயங்களான நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல குணநலன்கள் போன்றவற்றை குறிக்கிற இடத்தில் GOODNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் நற்குணம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
It is his father's goodness that saved his life.
அவனது தந்தையின் நற்குணமே அவனது உயிரைக் காப்பாற்றியது.
Meaning
இரண்டாவதாக It refers to the beneficial or nourishing element of food என்று சொல்லலாம் அதாவது உணவின் பயனுள்ள அல்லது ஊட்டமளிக்கும் உறுப்பு என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே ஒவ்வொரு உணவும் வெவ்வேறு வகையான வைட்டமின்களையும் சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவ்வாறாக இந்த வைட்டமின்களையும் சத்துக்களையும் குறிக்கின்ற இடத்தில் இந்த GOODNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது தமிழில் நற்குணம் அல்லது சத்து என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
If you cook the vegetables for a long time, it will lose its goodness.
காய்கறிகளை நீண்ட நேரம் சமைத்தால், அது அதனது நற்குணத்தை இழக்கும்.
Meaning
மூன்றாவதாக It is used to express any strong emotions என்று சொல்லலாம் அதாவது எந்தவொரு வலுவான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த பயன்படுகிறது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் ஆச்சரியப்படும்போது அல்லது சந்தோஷப்படும்போது அல்லது கோவப்படும்போது தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில வார்த்தைகளை பயன்படுத்துவான். அந்த வார்த்தைகளில் ஒன்றாக இந்த GOODNESS என்ற இந்த வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ஒரு மனிதன் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது "கடவுளே" என்று கடவுளை அழைப்பதும் உண்டு. எனவே அந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் போது GOODNESS என்ற இந்த வார்த்தையானது GOD என்ற வார்த்தையின் மாற்று வார்த்தையாகவும் பார்க்கப்படுகிறது.
In a sentence
My goodness! Did you do it?
அருமை! நீயாடா இதனை செய்தாய்? (Happy & surprise)
ஐயோ! நீயா இதனை செய்தாய்? (Sorrowful)
Oh, my goodness! Help me எனும் பொழுது Oh, my God! Help me என்று அர்த்தம்.
அதாவது ஓ, என் கடவுளே! எனக்கு உதவுங்கள் என்று அர்த்தம்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மேற்சொன்ன அர்த்தங்களில் இந்த GOODNESS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக