Know the word HOSPITALITY...

Word of the day is HOSPITALITY...
Pronunciation
/ˌhɑː.spɪˈtæl.ə.t̬i/

Function
The word HOSPITALITY is a noun.

Meaning
It refers to the act of being friendly and welcoming to the guests and visitors என்று சொல்லலாம் அதாவது விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் நட்புடன் வரவேற்கும் செயல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நமது வீட்டிற்கு நமக்கு முன்பின் அறிமுகமானவர்களோ அல்லது அறிமுகமாகாதவர்களோ விருந்தினர்களாக வரும்பொழுது அவர்களுக்கு இருப்பதற்கு இடம் கொடுத்து, உண்பதற்கு உணவு கொடுத்து, குடிப்பதற்கு தேநீர் கொடுத்து, அவர்கள், அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது எவ்வாறு சுதந்திரமாக இருப்பார்களோ அதைப் போலவே சுதந்திரமாக, 
அவர்கள் வீடு போலவே நமது வீட்டையும் அனுபவிப்பதற்கு அனுமதி கொடுத்து அவர்களை உபசரிக்கும் ஒரு செயலை இந்த HOSPITALITY என்ற இந்த வார்த்தை குறிக்கிறது.

வந்தாரை வரவேற்பது தமிழரின் பண்பாடு என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு அதாவது வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு என்று சொல்வார்கள்.

பொதுவாகவே வெளிநாட்டினர் தமிழ்நாட்டிற்கு வரும் பொழுது அவர்கள் சிறந்த விதமாக உபசரிக்கபடுவதாக அவர்களே என்னிடம் கூறி இருக்கிறார்கள். எனவே நண்பர்களே! நமது பண்பாட்டை தொடர்ந்து பின்பற்றுவோம் அது நமக்கு சிறந்ததாக அமையும்.

எனவே தமிழில் விருந்தோம்பல் என்ற அர்த்தத்தில் இந்த HOSPITALITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Usually the foreigners are happy about the hospitality that is provided to them.
பொதுவாக வெளிநாட்டினர் தங்களுக்கு வழங்கப்படும் விருந்தோம்பலை குறித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

If the company is good at hospitality, it will get more projects.
நிறுவனமானது விருந்தோம்பலில் சிறந்து விளங்கினால் அது அதிக செயல் திட்டங்களை பெறும்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் விருந்தோம்பல் என்ற அர்த்தத்தில் இந்த HOSPITALITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...