Know the word INTIMATE...

Word of the day is INTIMATE...
Pronunciation
/ˈɪn.t̬ə.meɪt/

Function
The word INTIMATE can be used as noun, adjective and verb.

இந்த வார்த்தையானது noun மற்றும் adjective ஆக செயல்படும் பொழுது கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் verb ஆக செயல்படும் பொழுது இதனுடைய அர்த்தமானது முற்றிலும் மாறுபடுகிறது.

Meaning (noun)
முதலாவதாக INTIMATE என்ற இந்த வார்த்தையானது NOUN ஆக செயல்படும் பொழுது it refers to a very close friend என்று சொல்லலாம் அதாவது மிக நெருங்கிய நண்பர் என்று அர்த்தம்.

மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லும் பொழுது அந்த நண்பர் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

எனவே தமிழில் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது மிகவும் நெருக்கமானவர் என்ற அர்த்தத்தில் இந்த INTIMATE என்ற வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தலாம்.

In a sentence
Everything about him is known to his intimates.
அவரைப் பற்றிய அனைத்தும் அவரது மிகவும் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

Meaning (adjective)
இரண்டாவதாக INTIMATE என்ற இந்த வார்த்தையானது ADJECTIVE ஆக செயல்படும் பொழுது it means private and personal என்று சொல்லலாம் அதாவது தனிப்பட்ட மற்றும் தனி நபர் சார்ந்த என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த INTIMATE என்ற இந்த வார்த்தையானது ADJECTIVE ஆக செயல்படும் பொழுது அந்தரங்க விஷயங்கள் அடங்கிய மேலும் பிற மனிதருடன் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு மனிதனின் தனிப்பட்ட உறவை அல்லது தனி மனிதன் சார்ந்த மிக மிக நெருக்கமான ஒரு உறவை விவரிக்கிறது.

எனவே ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது தமிழில் மிக மிக மிக நெருங்கிய ஒரு உறவு என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தலாம் மேலும் அந்த உறவானது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள உறவிற்கு ஒத்த நெருக்கத்தை குறிக்கும்.

In a sentence
It seems that those two have entered into an intimate relationship.
அவர்கள் இருவரும் மிக மிக மிக நெருங்கிய ஒரு உறவில் இருப்பதாக தெரிகிறது.

Meaning (adjective)
மேலும் நண்பர்களே! இந்த INTIMATE என்ற இந்த வார்த்தையை ADJECTIVE ஆக பயன்படுத்தும் பொழுது கை தேர்ந்த அல்லது ஆழமான என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் அதாவது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நன்கு கற்று தேர்ந்திருக்கும் பொழுது அல்லது அதனைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பெற்றிருக்கும் பொழுது  பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He has an intimate knowledge on astronomy.
வானவியலில் அவருக்கு ஆழ்ந்த அறிவு உண்டு அல்லது அவர் வானவியலில் கை தேர்ந்தவர்.

Meaning (Verb)
மூன்றாவதாக INTIMATE என்ற இந்த வார்த்தையானது VERB ஆக செயல்படும் பொழுது it means to imply என்று சொல்லலாம் அதாவது ஒருவர் சொல்ல விரும்பும் அல்லது சொல்ல நினைக்கும் ஒரு விஷயத்தை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக வெளிப்படுத்தகின்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் வெளிப்படுத்துதல் அல்லது தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் அது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

In a sentence
He intimates that he will leave the job soon.
அவர் விரைவில் வேலையை விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த INTIMATE என்ற இந்த வார்த்தையை தமிழில் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது மிகவும் நெருக்கமானவர் அல்லது மிக மிக மிக நெருங்கிய ஒரு உறவு அல்லது கை தேர்ந்த அல்லது ஆழமான அல்லது வெளிப்படுத்துதல் அல்லது தெரிவித்தல் என்ற அர்த்தத்தில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...