Know the word JEJUNE...

Word of the day is JEJUNE...
Pronunciation
/dʒəˈdʒuːn/

Function
The word JEJUNE is an adjective.

Meaning
It means childish, boring and not interesting என்று சொல்லலாம் அதாவது குழந்தைத்தனமான, சலிப்பான மற்றும் சுவாரஸ்யமற்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அல்லது பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அல்லது ரசிக்கும் அளவுக்கு  இல்லாத பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு படமானது பெரிதாக ரசிக்கும் அளவுக்கு இல்லாத பொழுது அந்த படத்தை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

அதைப்போலவே ஒரு கதையை வாசிக்கும் பொழுது அந்த கதை பெரிதாக சொல்லும் அளவுக்கு இல்லாத பொழுது அந்த கதையை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

அதைப்போலவே ஒரு மனிதர் பேசும் பொழுது அவரது பேச்சு பெரிதாக சொல்லும் அளவுக்கு அல்லது ரசிக்கும் அளவுக்கு அல்லது அவரது பேச்சில் ஆக்கமோ ஊக்கமோ அல்லது அறிவோ இல்லாத பொழுது அந்த பேச்சை இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

எனவே தமிழில் அறிவற்ற, மனத்திற்கு நிறைவளிக்காத, கவர்ச்சியற்ற, சலிப்பான, ஊக்கமற்ற போன்ற அர்த்தங்களில் இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The movie Love Today does not seem to be a jejune movie.
லவ் டுடே படமானது சலிப்பு தட்டாத ரசிக்கக்கூடிய ஒரு படம் போல் தெரிகிறது.

People will laugh at your jejune suggestion.
உனது அறிவற்ற ஆலோசனையைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பயனற்ற, அறிவற்ற, மனத்திற்கு நிறைவளிக்காத, கவர்ச்சியற்ற, சலிப்பான, ஊக்கமற்ற போன்ற அர்த்தங்களில் இந்த JEJUNE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...