Know the word MUSINGS...

Word of the day is MUSINGS...
Pronunciation
/ˈmjuː.zɪŋz/

Function
The word MUSINGS is a noun.

Meaning
It refers to thoughts or comments on something that one has been thinking about carefully and for a long time என்று சொல்லலாம் அதாவது ஒருவர் கவனமாகவும் நீண்ட காலமாகவும் யோசித்துக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றிய எண்ணங்கள் அல்லது கருத்துகள் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் நமது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதைப்போலவே பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறிய கருத்துக்கள் நமது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதைப்போலவே நமது வாழ்க்கையில் நமக்கு நடந்த ஒரு நிகழ்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறாக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்களை குறித்து மிகவும் ஆழமாகவும் நீண்ட காலமாகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நமது மனதில் எழுகின்ற எண்ணங்களை இந்த MUSINGS என்ற இந்த வார்த்தையானது குறிக்கிறது.

MUSINGS என்ற இந்த வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தும் போது பெரும்பாலும் பன்மையாக அதாவது MUSINGS என்றே பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் MUSING என்று பயன்படுத்தும் பொழுது இதனை ADJECTIVE ஆகவும் பயன்படுத்தலாம்.

அதாவது MUSING DIARY என்று சொல்வார்கள் அதாவது ஒருவர் நீண்ட நேரம் செலவு செய்து சிந்தித்து எழுதிய கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தை குறிக்கிறது.

எனவே தமிழில் சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் என்ற அர்த்தத்தில் MUSINGS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
It is said that his musings are so profound.
அவரது எண்ணங்கள் மிகவும் ஆழமானவையாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

He does not like to be disturbed when he writes his musings.
அவர் அவரது சிந்தனைகளை எழுதும்போது தொந்தரவு செய்யப்படுவதை விரும்புவதில்லை.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் என்ற அர்த்தத்தில் MUSINGS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...