Know the word PLAUSIBLE...

Word of the day is PLAUSIBLE...
Pronunciation
/ˈplɑː.zə.bəl/

Function
The word PLAUSIBLE is an adjective.

Meaning
It means seeming likely to be true, or able to be believed என்று சொல்லலாம் அதாவது உண்மைக்கு ஏதுவாக அல்லது நம்பதகுந்ததாக தோன்றுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் எதையாவது ஒன்றை குறித்து விளக்கம் அளிக்கப்படுகின்ற இடத்தில் அந்த விளக்கத்தை விவரிக்கின்ற இடத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்த ஒரு மாணவனிடம், "ஏன் பள்ளிக்கு வரவில்லை?" என்று விளக்கம் கேட்கிற இடத்தில் அந்த மாணவன் சொல்கிற விளக்கமானது ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நம்பதகுந்த வகையில் இருக்கும் பொழுது இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு பொருளை விற்கின்ற வியாபாரி அந்த பொருளை விற்பதற்காக அந்த பொருளை பற்றிய விஷயங்களை நம்பதகுந்த வகையில், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எடுத்துக் கூறி அந்த பொருளை விற்கின்ற இடத்தில் இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே சொல்லப்படுகின்ற விளக்கமானது உண்மை போல் தெரியும் பொழுது, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் பொழுது மேலும் நம்ப தகுந்ததாக இருக்கும் பொழுது இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் சொல்லப்பட்ட விளக்கமானது உண்மையானதாக அல்லது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சில நேரங்களில் சில வியாபாரிகள் அல்லது சில நபர்கள் கூறுகின்ற விளக்கத்தை கேட்கும் பொழுது நமக்கே சில நேரங்களில் சொல்ல தோன்றும் அதாவது "கொஞ்சமாவது நம்பக்கூடிய வகையில் சொல்லுப்பா"  என்று. அப்படிப்பட்ட இடத்தில் இந்த PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் நியாயமான அல்லது நம்பதகுந்த அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய போன்ற அர்த்தங்களில் PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
It seems that he does not give a plausible explanation.
அவர் நம்பக்கூடிய ஒரு விளக்கத்தை தருவது போல் தெரியவில்லை.

Since he gave a plausible excuse, he was allowed.
அவர் ஒரு நியாயமான காரணத்தை கூறியதால், அவர் அனுமதிக்கப்பட்டார்.

That boy is very tricky that he always gives a plausible explanation.
அந்த பையன் மிகவும் தந்திரமானவன், அவன் எப்போதும் நம்பத்தகுந்த விளக்கத்தை தருகிறான்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் நியாயமான அல்லது நம்பதகுந்த அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய போன்ற அர்த்தங்களில் PLAUSIBLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...