Know the word PLEASED...

Word of the day is PLEASED...
Pronunciation
/pliːzd/

Function
The word PLEASED is an adjective.

Meaning
It means happy or satisfied என்று சொல்லலாம் அதாவது மகிழ்ச்சி அல்லது திருப்தி என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த PLEASED என்ற இந்த வார்த்தையானது ஒரு நிகழ்ச்சியோ அல்லது ஒரு சூழ்நிலையோ மனதிற்கு இன்பத்தை தரும் பொழுது அதனால் ஏற்படும் மன நிறைவை அல்லது மகிழ்ச்சியை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக நண்பர்களே! இப்படிப்பட்ட மகிழ்ச்சியோ அல்லது மன நிறைவோ ஒருவரது எதிர்பார்ப்பு நிறைவேறுகிற இடத்தில் அல்லது ஒருவரது சுயமதிப்பு உயருகிற இடத்தில் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் PLEASED என்ற இந்த வார்த்தையை ஒருவரை வாழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம் அதாவது ஒரு நபரை முதல் முறையாக சந்திக்கும் பொழுது I AM PLEASED TO MEET YOU என்று சொல்லலாம் அதாவது நான் உங்களை சந்தித்ததில் மன மகிழ்ச்சி அடைகிறேன் என்று அர்த்தம் இவ்வாறாக இந்த PLEASED என்ற இந்த வார்த்தையை ஒருவரை வாழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் இன்பம் அல்லது மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் அல்லது மன மகிழ்ச்சி போன்ற அர்த்தங்களில் இந்த PLEASED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Everybody is pleased with your presence.
உங்களது வருகையால் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

It seems that he is pleased within.
அவன் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிகிறது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் இன்பம் அல்லது மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் அல்லது மன மகிழ்ச்சி போன்ற அர்த்தங்களில் இந்த PLEASED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...