Know the word PRECIPITATION...

Word of the day is PRECIPITATION...
Pronunciation
/priːˌsɪp.əˈteɪ.ʃən/

Function
The word PRECIPITATION is a noun.

Note
இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம். இந்த மூன்று அர்த்தங்களுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்லலாம்.

Meaning
முதலாவதாக It refers to any form of water that falls from the sky towards the ground என்று சொல்லலாம் அதாவது வானிலிருந்து நீரானது எந்த வடிவத்தில் தரையில் விழுந்தாலும் அதனைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

வானிலிருந்து நீரானது எந்த வடிவத்தில் தரையில் விழுந்தாலும் அதனை குறிக்கிறது என்று சொல்லும் பொழுது வானிலிருந்து நீரானது எந்தெந்த வடிவங்களில் தரையில் விழுகிறது என்பதை தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

முதலாவதாக வானிலிருந்து நீரானது RAIN அதாவது மழை வடிவத்தில் தரையில் விழுகிறது.
 
இரண்டாவதாக வானிலிருந்து நீரானது SNOW வடிவத்தில் அதாவது பனி வடிவத்தில் தரையில் விழுகிறது.

மூன்றாவதாக வானிலிருந்து நீரானது SLEET வடிவத்தில் அதாவது மழைத்துளி அளவில் உறைந்த பனிக்கட்டியாக தரையில் விழுகிறது.

நான்காவதாக வானிலிருந்து நீரானது HAIL வடிவத்தில் அதாவது ஆலங்கட்டி மழையாக தரையில் விழுகிறது.

இவ்வாறாக வானிலிருந்து நீரானது எந்த வடிவத்தில் தரையில் விழுந்தாலும் அதனை குறிக்க இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
There is no chance of precipitation during the night.
இரவில் நீரானது எந்த வடிவத்திலும் பொழிய வாய்ப்பில்லை.

Meaning
இரண்டாவதாக இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையானது வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு கரைசலை உருவாக்கும் பொழுது கரை பொருளில் உள்ள சில பகுதிகள் கரையாமல் கரைசலின் அடிப்பகுதியில் சேரும்பொழுது அந்த கரையாத திண்ம பகுதியை குறிக்க இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் வீழ்படிவு என்று பயன்படுத்த வேண்டும்.

In a sentence
There is some precipitation at the bottom of the container.
கொள்கலனின் அடிப்பகுதியில் கொஞ்சம் வீழ்படிவு சேர்ந்துள்ளது.

Meaning
மூன்றாவதாக it refers to a way of behaving too quickly and without thinking என்று சொல்லலாம் அதாவது சிந்தனை செய்யாமல் அவசர கதியில் நடந்து கொள்ளுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒருவர் முட்டாள்தனமான ஒரு முடிவெடுத்து அதனை துணிகரமாக செயல்படுத்தும் பொழுது இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதாவது நண்பர்களே! ஒரு முட்டாள்தனமான முடிவை குறிப்பதற்காக இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது அந்த முட்டாள்தனமான முடிவானது ஒருவர் தலைகீழாக மேலேயிருந்து கீழே குதிப்பதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் முட்டாள்தனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
The ruling government is accused of acting with precipitation.
ஆளும் அரசாங்கமானது முட்டாள்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

Practice it
எனவே நண்பர்களே! மேற்கூறிய அர்த்தங்களில் இந்த PRECIPITATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...